Thursday, November 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 11

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
281. தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் எது?
282. தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் எது?
283. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
284. தமிழ்நாட்டில் "ஆர்ட்டிசன்" ஊற்றுகள் எங்குள்ளன?
285. காவிரி நதி நீர் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
286. "இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி?
287. காவிரி நதியின் நீளம் எவ்வளவு?
288. தமிழகத்தில் நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் எவை?
289. குருசடை தீவு எங்கு அமைந்துள்ளது?
290. ஆதாம் பாலம் எங்கு உள்ளது?
291. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?
292. தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
293. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகள் யார்?
294. "ஸ்லம் டாக் மில்லினர்" படத்துக்காக கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் யார்?
295. இந்தியாவின் அரண்மனை நகரம் எது?
296. டெல்லி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
297. திட்டக்குழுவின் தலைவர் யார்?
298. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
299. அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
300. ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?
301. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?
302. Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?
303. இந்தியாவில் வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
304. நரிமணம் எதற்கு பெயர்பெற்றது?
305. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி எங்குள்ளது?
306. எய்ட்ஸ் நோயை உறுதிசெய்யும் பரிசோதனை எது?
307. சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ள கிரகம் எது?
308. லாட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?
309. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
310. கடல் அலைகள் உண்டாக காரணம் என்ன?
311. My Experiments with Truth என்ற நூலை எழுதியவர் யார்?
312. ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
313. எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?
314. வடகிழக்கு பருவக்காற்றினால் அதிகம் மழை பெரும் மாநிலம் எது?
315. தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு?
விடைகள்
281. தொட்டபட்டா (நீலகிரி மலை)
282. ஆனைமுடி (ஆனைமலை)
283. நாமக்கல் மாவட்டம்
284. சோழ மண்டல கடற்கரை சமவெளி
285. 1997
286. ஒக்கேனக்கல்
287. 760 கி.மீ.
288. மதுரை, திருச்சி, ரங்கம், நெல்லை, வேலூர்
289. மன்னார் வளைகுடாவில் மண்டபத்துக்கு அருகே. இது "சுற்றுச்சூழல் சொர்க்கம்" (Ecological Paradise) என்று அழைக்கப் படுகிறது.
290. ராமேசுவரத்துக்கும் இலங்கை மன்னார் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே ஆதாம் பாலம் என்றும், ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 30 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது.
291. சென்னிமலை
292. 1980
293. நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர்
294. ஏ.ஆர்.ரகுமான்
295. கொல்கத்தா
296. யமுனை
297. பிரதமர்
298. திருவனந்தபுரம்
299. கேரளம்
300. ஜீலம்
301. தொட்டபட்டா (நீலகிரி)
302. கவாஸ்கர்
303. 1927
304. பெட்ரோல்
305. ஹைதராபாத்
306. வெஸ்டன் பிளாட் சோதனை
307. புளூட்டோ
308. லண்டன்
309. சென்னை அடையாறு
310. சந்திரன் சூரியன் புவியீர்ப்பு விசை
311. காந்தி
312. ஒடிஸா
313. பூச்சிகளைப் பற்றிய படிப்பு
314. தமிழ்நாடு
315. 1,30,058 ச.கி.மீ. 

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
 

No comments:

Post a Comment