பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?
72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?
73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?
82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?
83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?
84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?
85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?
88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?
89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?
93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?
94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?
95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?
96. தமிழக அரசின் மாநில மரம் எது?
97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?
101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது? 104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?
105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?
106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?
107. உலகின் மிகப்பெரிய நாடு எது?
108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?
109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?
110. யூத மதத்தின் புனித நூல் எது?
விடைகள்:
71. 1,492
72. வாஷிங்டன்
73. ரா.பி.சேதுப்பிள்ளை
74. 1955
75. 1967
76. 1968
77. 1996
78. 12,500
79. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
80. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
81. ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு
82. மேட்டூர் அணை
83. பீஜிங் (சீனா)
84. கனடா - வான்கோவர் நகரம்
85. ஓடோஸ்கோப் (Odoscope)
86. பெங்களூரு
87. மகாராஷ்டிரா
88. பீகார்
89. 18 சதவீதம்
90. 2 சதவீதம்
91. பாலகங்காதர திலகர்
92. 7,516 கி.மீ
93. அல்பேனியா
94. வங்காளதேசம்
95. 4,120
96. பனை மரம்
97. 47 வருடங்கள்
98. 19 வருடங்கள்
99. AB
100. 32,80,483 ச.கி.மீ.
101. 75,166 கி.மீ
102. 15,200 கி.மீ
103. பிரம்மபுத்திரா
104. ஜெர்மனி
105. அகிலன் - ஜெயகாந்தன்
106. குஜராத், ஆந்திரம்
107. ரஷ்யா
108. பரம்வீர் சக்ரா
109. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
110. தோரா (Torah)
நன்றி - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
No comments:
Post a Comment