Thursday, November 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 16

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
461. 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
462. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற போர் விமானம் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டது?
463. 2013-ம் ஆண்டு இந்திய கடற்படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து நடத்திய போர் ஒத்திகையின் பெயர் என்ன?
464. Mycidac-C என்ற மலிவு விலை மருந்து எந்த நோய்க்காக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
465. இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் திருமணப்பதிவை கட்டாயமாக்கி இருக்கிறது?
466. இங்கிலாந்து அரசின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்?
467. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
468. ISIS என்பதன் விரிவாக்கம் என்ன?
469. 2013-ம் ஆண்டுக்கான புக்கர் இலக்கியப் பரிசு பெற்றவர் யார் ?
470. தமிழ்நாட்டில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
471. 2013-ம் ஆண்டு யாருடைய நினைவாக நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது?
472. தமிழ்நாடு காவல்துறையில் உடனடி தொடர்புகொள்ளும் வகையிலான நவீன முறை அமைப்பு டெரா (Terrestrial Trunked Radio-Tetra) எந்தெந்த மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
473. “Target 3 Billion” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
474. முப்பது வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்திவந்த ஒரு கார் கம்பெனி தனது குறிப்பிட்ட ரக காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அந்த காரின் பெயர் என்ன?
475. மைக்ரோ சாப்ட் என்ற அகில உலக கணினி நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி யார்?
476. 1952 முதல் 2009 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ரிசாங் கெய்சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
477. போர்ப்ஸ் என்ற மாத இதழால் மீண்டும் உலக கோடீஸ்வரராக குறிப்பிடப்பட்டவர் யார்?
478. கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யார்?
479. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் யார்?
480. “அனைவருக்கும் வீடு” என்ற மத்திய அரசின் திட்டம் முதன்முதலில் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?
481. வென்காப் (Vencobb) என்ற பெயர் கொண்டு விளம்பரப்படுத்தப்படுவது எந்த பொருளை குறிக்கிறது?
482. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியின் பெயர் என்ன?
483. லிபியா நாட்டின் தலைநகரம் எது?
484. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?
485. இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் எத்தனையாவது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்படுகிறது?
486. பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் யார்?
487. AIRBUS என்ற விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
488. அமெரிக்காவின் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவுள்ள அமெரிக்க சிறுமி யார்?
489. ஐ-போன் நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
490. கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு எது?
விடைகள்
461. இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா
462. ரஷ்யா
463. மலபார் 2013
464. புற்றுநோய்
465. டெல்லி
466. கபில்தேவ்
467. தென்கொரியா
468. Islamic State of Iraq and Syria
469. நியூசிலாந்து எழுத்தாளர் எலினர் காட்டன் (தி லூமினரிஸ் என்ற புத்தகத்துக்காக)
470. தேனி மாவட்டம்
471. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்
472. சென்னை, மதுரை, கோவை,
473. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
474. மாருதி-800
475. சத்யா நாதெள்ளா
476. மணிப்பூர்
477. பில்கேட்ஸ்
478. ராஜன் ஆனந்த்
479. அலோக் குமார்
480. டெல்லி
481. சிக்கன்
482. நீதிபதி எம்.ஷா கமிட்டி
483. திரிபோலி
484. சந்தீப் சக்சேனா
485. 139-வது பிறந்த நாள்
486. மார்க் ஷூக்கர்
487. பிரான்ஸ்
488. அலிசாகார்சன் (13 வயது)
489. டிம்குக்
490. முத்கல் கமிட்டி 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

No comments:

Post a Comment