பொது அறிவு-நடப்புக்கால நிகழ்வுகள்
491. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது?
492. தென்கிழக்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட புயலுக்கு எந்த நாடு "அஷோபா" என பெயரிட்டது?
493. ஈராக் நாட்டின் தலைநகரம் எது?
494. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் உதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு எவ்வளவு?
495. ஐந்தாயிரம் கி.மீ. வரை பறந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது?
496. தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் கொலம்பியா மாவட்ட
அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் யார்?
497. யாகூ தேடுபொறி (Yahoo Search Engine) எந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது?
498. ஜனநாயகத்தின் முதல் தூண் என குறிப்பிடப்படுவது?
499. உலக புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது?
500. சர்வதேச தண்ணீர் தினம் என்றைக்கு அனுசரிக்கப்படுகிறது?
501. டெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டில் சிக்கி மூடப்பட்ட பிரபல பத்திரிகையின் பெயர் என்ன?
502. ஆலிவர் ரிட்லி என அழைக்கப்படும் கடல் ஆமைகள் எந்த மாநிலத்தின் கடற்கரையில் காணப்படுகின்றன?
503. பாகிஸ்தான் பிரதமர் யார்?
504. தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?
505. ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் யார்?
506. இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது?
507. சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
508. இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
509. தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?
510. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எத்தனை சின்னங்கள் இடம்பெற முடியும்?
விடைகள்
491. வாகா
492. இலங்கை
493. பாக்தாத்
494. ரூ.72 ஆயிரம்
495. ஒடிசா மாநிலம் பாலாசேர் அருகே உள்ள வீலாஐலண்டு தீவு
496. காந்த் சீனிவாசன்
497. 2004-ம் ஆண்டு
498. சட்டமன்றம்
499. ஏப்ரல் 23
500. மார்ச் 22
501. News of the World
502. ஒடிசா
503. நவாஸ் ஷெரீப்
504. ஸ்குவாஷ்
505. சந்தா கோச்சார் என்ற பெண்மணி
506. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்
507. மார்ச் 20
508. குண்டூர்
509. டாக்டர் பிரபு
510. 16
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
-நெல்லை எம்.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?
அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்
தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?
பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா
உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை
சேர்க்கப்பட்டுள்ளன?
குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், தகுதிகள், சபாநாயகர், துணை
சபாநாயகர்-தகுதிகள், தேர்வுமுறை, அதிகாரம், இப்பதவி வகித்தவர்கள் யார்
யார்?
பார்லிமெண்ட் மூலம் அமைக்கப்படும் கமிட்டிகள், பொதுக்கணக்கு குழு, நிதிக்குழு பற்றிய விவரங்கள்.
மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரங்கள், சட்டத்திருத்தங்கள் விவரம்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள் பற்றிய முழு விவரங்கள், துறையின் பெயர்கள்.
மாநில கவர்னர், முதல்-அமைச்சர், சட்டசபை, மேல்சபை, தகுதி, அதிகாரம்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம்,
எல்லை வரம்பு, அனைத்துவகை அதிகாரங்கள், பதவியிலிருந்தவர்கள் பெயர், ரிட்
மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ், மேண்டமாஸ்).
சட்டத்திருத்தங்கள் (Amendments), முக்கிய திருத்தங்கள் பற்றிய முழுவிவரங்கள்.
12 இணைப்பு பட்டியல்களில் (Schedules) என்னென்ன பொருள்கள் உள்ளன? புதிய மாநிலங்கள், தோற்றம்.
வடகிழக்கு எல்லை மாநிலங்கள் பற்றிய முழுவிவரம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், பழங்குடியினர்களின் பெயர்கள்.
7 யூனியன் பிரதேசங்கள் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா உறுப்பினர்கள், தலைநகரம்.
மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள், திட்டக்கமிஷன், இந்திய தேர்தல் ஆணையம்.
எந்தெந்த வெளிநாடுகளின் சட்டத்திலிருந்து என்னென்ன ஷரத்துகள் சேர்க்கப்பட்டன? என்ற முழு விவரம்.
நெருக்கடி நிலை, பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா, ஐம்மு-காஷ்மீர், சிக்கிம் பற்றிய சிறப்பு அம்சங்கள்.
மேற்குறிப்பிட்ட இனங்களில் முழுக்கவனம் செலுத்தி தயாரிப்பு மேற்கொண்டால்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண்
பெற்றுவிடலாம்.
நன்றி - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
No comments:
Post a Comment