Thursday, November 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 15

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
431. மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் வரை பிரதமர் நியமிக்கலாம்?
432. இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றுமுறை எது?
433. "நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு" என 2014 உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரு நாட்டின் தாரக மந்திரமாக குறிப்பிடப்பட்டது. அது எந்த நாடு?
434. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் எப்போது ஏவப்பட்டது?
435. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது?
436. மங்கள்யான் எந்த ராக்கெட் அனுப்பும் தளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது?
437. குஜராத் மாநில முதல்-அமைச்சர் யார்?
438. ஒடிசா முதல்-அமைச்சரான நவீன் பட்நாயக் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார்?
439. இந்த ஆண்டு செய்தித்தாள்களில் "SIMBEX14" என குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. அது என்ன?
440. 2014-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றவர் யார்?
441. 2013-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?
442. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் National Icon என ஒரு திரைப்பட நடிகரை அறிவித்தது. அந்த நடிகர் யார்?
443. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?
444. 2014-ம் ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
445. இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?
446. அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்-அமைச்சர் யார்?
447. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
448. 20-வது காமன்வெல்த் விளையாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது?
449. அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்?
450. 2014-ம் ஆண்டில் இந்திய அழகி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
451. பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கியின் பெயர் என்ன?
452. கண்டம் விட்டு கண்டம் பாயும் "தனுஷ்" ஏவுகணை எவ்வளவு எடை கொண்ட அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது?
453. 2013-ம் ஆண்டில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் தங்க கோயிலுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரதமர் யார்?
454. ரோகினி (RH 200) என்ற ராக்கெட் எந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது?
455. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?
456. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?
457. இந்தியாவின் 16-வது லோக் சபா சபாநாயகர் யார்?
458. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமாகியிருக்கும் மாநிலம் எது?
459. இந்த ஆண்டு "மேன் புக்கர் பரிசு" யாருக்கு வழங்கப்பட்டது?
460. இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
விடைகள்
431. நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் 10 சதவீதம் வரை
432. இ-போஸ்ட்
433. அர்ஜெண்டினா
434. 5.11.2013
435. 24.9.2014
436. ஸ்ரீஹரிகோட்டா
437. ஆனந்தி பென் படேல்
438. 4-வது முறை
439. இந்திய கடற்படையும், சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து இரு நாடுகளின் நல்லுறவை தெரிவிக்கும் வகையில் அந்தமான் கடலில் நடத்திய வருடாந்திர ஒத்திகை
440. விஜய் சேஷாத்திரி
441. குல்சார்
442. அமீர்கான்
443. ஜி.ரோகிணி
444. மாதங்கி சத்தியமூர்த்தி
445. 2015-ம் ஆண்டு
446. நபம்துகி
447. நார்வே
448. ஸ்காட்லாந்து (கிளாஸ்கோ)
449. 2016-ம் ஆண்டு இறுதியில்
450. கோயல்ரானா
451. பாரதீய மகிளா வங்கி (19.11.2013)
452. 500 முதல் 1000 கிலோ வரை
453. டேவிட் கேமரூன்
454. தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக
455. 15
456. ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்
457. சுமித்ரா மகாஜன்
458. தெலங்கானா
459. ஆஸ்திரேலிய நாட்டு எழுத்தாளர் ரிச்சர்ட் பிளான்கான். The Narrow road to the deep North என்ற நாவலை எழுதியதற்காக
460. நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

No comments:

Post a Comment