பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
111. "சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்?
112. "வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?
113. குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?
114. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது?
115. Femicide என்றால் என்ன?
116. Genocide என்பது என்ன?
117. இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?
118. ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?
119. சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
120. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?
121. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
122. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?
123. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?
124. Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?
125. "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?
126. இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?
127. நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?
128. "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?
129. பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?
130. பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
131. இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?
132. காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
133. இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?
134. "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?
135. I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?
136. "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
137. கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?
138. "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?
139. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?
140. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
141. தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?
142. அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?
143. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
144. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
145. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை?
146. இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?
147. சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
148. இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?
149. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை?
150. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?
விடைகள்
111. முதலாம் குலோத்துங்கன்
112. முதலாம் நரசிம்ம பல்லவன்
113. முதலாம் மகேந்திர வர்மன்
114. உருகுவே - 1930
115. பெண்ணை கொல்வது
116. இனப்படுகொலை
117. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)
118. எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ
119. 1711-12-ல் டேனியர்களால்
120. 1935-ம் ஆண்டு சட்டம்
121. 20.12.1996-ல்
122. பல கட்சி முறை
123. இரு கட்சிமுறை
124. மத்தியப் பிரதேசம்
125. சோலி சொராப்ஜி
126. மகாராஜா ரஞ்சித் சிங்
127. டல்ஹவுசி பிரபு
128. ராஜாராம் மோகன்ராய்
129. நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது
130. அன்னி பெசன்ட் அம்மையார்
131. ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும்,
நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்.
132. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
133. தாதாபாய் நௌரோஜி
134. தாதாபாய் நௌரோஜி
135. சுரேந்திரநாத் பானர்ஜி
136. பிபின் சந்திரபால்
137. பால கங்காதர திலகர்
138. பால கங்காதர திலகர்
139. ஹென்றி டுனான்ட் (Henri Dunant)
140. மேரி கியூரி (இயற்பியல் - 1903)
141. 31 நாடுகளில்
142. ஜனநாயகக் கட்சி
143. ராஜாஜி
144. பிரிவு 106
145. 1. வரதட்சணை தடுப்பு சட்டம்-1961
2. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978
3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002
146. புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்
147. ஜெனீவா
148. மும்பை
149. 906
150. 1,706
நன்றி - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
No comments:
Post a Comment