அறிவியல் மற்றும் பொது அறிவியல்
856. ஜிப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?
857. சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன?
858. அடர் குளோரிக் அமிலம், அடர் கந்தக அமிலம் கலந்த கலவை (3:1) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
859. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
860. பாலில் உள்ள அமிலம் எது? 861. ஸ்பிரிட் எனப்படுவது யாது?
862. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது எது?
863. சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?
864. போட்டோ தொழிலில் பயன்படும் வேதிப்பொருள் எது?
865. அலுமினிய தாதுவின் பெயர் என்ன?
866. பழங்களை பழுக்கவைக்கும் வாயுவின் பெயர் என்ன?
867. பூமியில் தனித்து கிடைக்கும் ஓர் உலோகம் எது?
868. பென்சிலில் உள்ள வேதிப்பொருள் எது?
869. ஒளி புகுந்துசெல்லக்கூடிய உலோகம் எது?
870. மிகவும் லேசான வாயு எது?
871. "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" என்பது என்ன?
872. "Quick Silver" என அழைக்கப்படும் உலோகம் எது?
873. நியூட்ரான் இல்லாத தனிமம் எது?
874. 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம் என்ன?
875. "பச்சை துத்தம்" எனப்படுவது எது?
876. தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
877. மணலின் வேதிப்பெயர் என்ன?
878. சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன?
879. திண்ம நிலையில் உள்ள அமிலம் எது?
880. எப்சம் என்பது என்ன? 881. இரும்பின் முக்கிய தாது எது?
882. பித்தளையின் சேர்மங்கள் யாவை?
883. சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை?
884. வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?
885. சிமெண்டில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள்கள் யாவை?
886. புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது?
887. மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
888. இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
889. டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
890. சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது?
விடைகள்
856. கால்சியம் சல்பேட் 857. சலவை சோடா 858. ராஜதிராவகம் 859. சிட்ரிக்
அமிலம் 860. லாக்டிக் அமிலம் 861. மெதில் ஆல்கஹால் 862. நைட்ரஸ் ஆக்சைடு
863. 24 காரட் 864. வெள்ளி நைட்ரேட் 865. பாக்ஸைட் 866. எத்திலின் 867.
தங்கம் 868. கிராஃபைட் 869. மைக்கா 870. ஹைட்ரஜன் 871. ஜிப்சம் 872.
பாதரசம் 873. ஹைட்ரஜன் 874. 91.6 சதவீதம் 875. நீரேற்றப்பட்ட பெர்ரஸ்
சல்பேட் 876. ஃபார்மிக் அமிலம் 877. சிலிக்கன்-டை-ஆக்ஸைடு 878. சுக்ரோஸ்
879. பென்சாயிக் அமிலம் 880. மெக்னீசியம் சல்பேட் 881. ஹேமடைட் 882.
தாமிரம், துத்தநாகம் 883. ஹீலியம், ஹைட்ரஜன் 884. ஜீரோ டிகிரி செல்சியஸ்
885. சுண்ணாம்பு, அலுமினா, சிலிகா 886. நிக்கோடின் 887. வைட்டமின்-டி 888.
ஃபார்மால்டிஹைடு 889. யூக்கலிப்டஸ் 890. மீத்தேன்
பொது அறிவியல்
குரூப்-4 தேர்வு வினாக்களில் பொது அறிவியல் பாடத்திட்டத்தில், இயற்பியல்,
வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து குறைந்தபட்சம் 15
கேள்விகள் முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுவது முந்தை ஆண்டு
வினாத்தாள்களை ஆய்வு செய்தால் தெரிய வரும். சில வருடங்கள் இயற்பியல்,
வேதியியலில் 10 கேள்விகளும், சில ஆண்டுகள் தாவரவியல், விலங்கியலில் 10
கேள்விகளும் கேட்கப்படுகின்றன. கேள்விகள் எல்லாம் அடிப்படை அறிவியலில்
இருந்து கீழ்க்கண்டவாறு கேட்கப்படுவதை அறிய முடிகிறது. இயற்பியல் -
கண்டுபிடிப்புகள், சூரியன், சூரிய ஆற்றல், சூரிய கோள்கள், காந்தம்,
மின்சாரம், மின்அறிவியல், இயற்பியலின் அனைத்து அடிப்படை விதிகள், அவற்றின்
செயல்பாடுகள் வேதியியல் - தனிமங்கள், அமிலம், காரம், பயிர்களுக்கான
உரங்களின் வேதியியல் பெயர்கள், ஆக்சிஜனேசன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன்,
சோடியம் கார்பனேட், பயோ-டீசல், யுரேனியம், பிளிச்சிங் ஏஜெண்ட், குளோரோபாம்,
தங்கம், வெள்ளி, காட்மீயம், இயற்கை வாயு தொடர்பான விவரங்கள் தாவரவியல் -
தாவர செல்கள், கிளைக்காலஜிஸ், புரோட்டோ பிளாசம், உணவுப்பயிர்கள்,
தாவரப்பெயர்கள், தாவரங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கை உயிரியல் - நாளமில்லா
சுரப்பிகள், ரத்தங்கள், வைட்டமின்கள், டிஎன்ஏ, மனித உடல் உறுப்பு நோய்கள்
விவரம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் எனவே, தேர்வெழுதுவோர் 6-வது வகுப்பு
முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொது அறிவியல் புத்தகங்கள், நவீன அறிவியல்
கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக
தொடர்ச்சியாக குறிப்புகள் எடுத்துப் படித்தால் அறிவியல் கேள்விகளுக்கு நல்ல
முறையில் பதில் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம்.
நன்றி - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
No comments:
Post a Comment