Saturday, December 13, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV - இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினா - விடை 45

இந்தியப் பொருளாதாரம்
டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வின் பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பொருளாதாரம் பாடத்திலிருந்து 5 முதல் 10 கேள்விகள் வரை கேட்கப்படலாம்.
கணிதத்தைப் போலவே இந்த பாடத்தையும் புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இந்தியாவின் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி ஆகியவை ஒன்றுக்கொன்று பிணைந்தவை ஆகும். சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால் இதை புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஐந்தாண்டு திட்டங்கள், அவற்றின் இலக்குகளை கூறலாம். அவை நிறைவேற்றப்பட்டபோது நாட்டின் வேளாண்மை, தொழில், மனித வளம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியையும், அதன் மூலம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உருவான மாறுதல்களையும் காணமுடியும்.
எனவே இந்திய பொருளாதாரம் என்பது புரிதலோடு ஊன்றி படிக்க வேண்டிய பகுதியாகும். பொருளாதாரத் தன்மைகள், நிலச் சீர்த்திருத்தம், கிராம மற்றும் சமூக நலத் திட்டங்கள், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களில் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கலாம். 2001 மற்றும் 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
- இராஜபூபதி ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
மாதிரி வினா - விடை- இந்தியப் பொருளாதாரம்
1333. பாரத ஸ்டேட் வங்கி எந்த வருடம் தேசியமயமாக்கப்பட்டது A)1921 B)1955 C)1969 D)1949
1334. வங்கி சார்ந்த கூட்டுக் குழுமத்திற் கான அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை A)7 B)10 C)20 D)எதுவுமில்லை
1335. ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது யார்? A)திட்டக்குழு B)நிதி அமைச்சகம் C)நிதிக்குழு D)தேசிய வளர்ச்சிக் குழு
1336. கீழ்க்கண்ட ஆண்டுகளில் எந்த வருடத்தில் இந்திய ரூபாயின் மதிப்புக் குறைக்கப்படவில்லை? A)1949 B)1966 C)1991 D)2005
1337. 1945-ம் ஆண்டு 'மக்கள் திட்டத்தை' மொழிந்தவர். A) சர் M. விஸ்வேஸ்வரய்யா B) S.N.அகர்வால் C)J.P. நாராயண் D) M.N. ராய்
1338. “ஒருவருக்கு ஒரு வாக்கு” என்ற கொள்கை எவ்வகை நிறுவனத்தில் பின்பற்றப்படுகிறது. A) கூட்டாண்மை B) நிறுமம் C) கூட்டுறவு அமைப்புகள் D) பொதுத்துறை நிறுவனங்கள்
1339. “வறுமை விரட்டுதல்” (GARIBI HATAO) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது எப்போது? A) முதல் ஐந்தாண்டு திட்ட காலம். B)இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலம். C) நான்காவது ஐந்தாண்டு திட்ட காலம். D) ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலம்.
1340. “இந்திய தொழில் நிதிக் கழகம்” உருவான வருடம் A)1936 B)1948 C)1950 D)1956
1341. இந்தியாவில் முதன் முதலாக வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு? A)1806 B)1770 C)1840 D)1780
1342. தேசிய வளர்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? A)1948 B)1950 C)1951 D)1952
1343. “மனித வளர்ச்சி குறீயீடு (HDI)” எந்த வருடத்தில் ஐ.நா. வளர்ச்சி திட்ட அமைப்பினால் (UNDP) உருவாக்கப்பட்டது A)1990 B)1994 C)1898 D)1995
1344. சேவை வரி இந்தியாவில், முதன் முதலில் எந்த வருடம் கொண்டு வரப்பட்டது? A)1994 B)1995 C)1996 D)1997
1345. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வைப்பு செய்வது A)நிலை வைப்பு B)நடைமுறை வைப்பு C)தொடர்வைப்பு D)சேமிப்பு வைப்பு
1346. மாநில திட்டக்குழுவின் தலைவர் A)நிதி அமைச்சர் B)சபாநாயகர் C)ஆளுநர் D)முதலமைச்சர்
1347. ‘பொருளியல் கிடைப்பருமை பற்றிய அறிவியலாகும்’ என்கிற கருத்தை தந்தவர். A)ஆடம்ஸ்மித் B)ராபின்சன் C)மார்ஷல் D)சாமுவேல்சன்
1348. நுகர்வோரியலின் தந்தை எனப்படுபவர். A) ஜான் எப் கென்னடி B) ரால்ப் நேடர் C) ஹஜ்-பஹ்கிர்க் D) P. கோட்லாரின்
1349. இந்தியாவில் சமூக முன்னேற்ற திட்டம் (Community Development Program) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது A)1953 B)1952 C)1951 D)1954 1350. இந்திய பத்திர மற்றும் மாற்றகங் களின் வாரியம் (SEBI) என்பது A)இந்திய தொழில் துறை புதுப்பிக்கும் வங்கி B)தேசிய ஏற்றுமதி வங்கி C)நிதி நிறுவனம் D) பங்கு அங்காடி கட்டுப்பாடு நிறுவனம்
1351. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களின் உச்ச அளவு A)5 B)60 C)100 D)வரையறை இல்லை
1352. பொது உடைமையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் A) ஆடம் ஸ்மித் B) காரல் மார்க்ஸ் C) மார்ஷல் D) மால்தஸ்
விடைகள்
1333. B 1334. B 1335. D 1336. D 1337. D 1338. C 1339. D 1340. B 1341. B 1342. D 1343. A 1344. A 1345. A 1346. D 1347. B 1348. B 1349. B 1350. D 1351. D 1352. B

No comments:

Post a Comment