Monday, December 1, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் IV வினா-விடை 33

பொதுத் தமிழ்
994. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல்?
995. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார்?
996. இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது?
997. பிரித்து எழுதுக: வையந்தழைக்கும்
998. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது?
999. அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை?
1000. இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர்
1001. குண்டலகேசி எந்த சமயக் காப்பியம்?
1002. "குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1003. "நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
1004. கம்பராமாயணத்தின் முதல் பகுதி --------
1005. கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன?
1006. பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது?
1007. ‘தொப்பி' என்பது .................
1008. உவமும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது .............
1009. கலிப்பாவுக்கு உரிய ஓசை .................
1010. பால் தருவது காளையா? பசுவா? - இது என்ன வழு?
1011. போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது
1012. "மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன் .............
1013. இறையனார் அகப்பொருள் உரை "பொருள்கோள்' என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது?
1014. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?
1015. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது ?
1016. நற்றிணையைத் தொகுப்பித்தவர்
1017. வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை ................
1018. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் ............
விடைகள்
994. பவுத்தம்
995. நான்கு
996. கருப்பொருள்
997. வையம் + தழைக்கும்
998. பிராகுயி
999. ஏழு
1000. வினைத் தொகை
1001. பவுத்தம்
1002. மாதவையா
1003. சுந்தரம் பிள்ளை
1004. பாலகாண்டம்
1005. பரதன்
1006. வள்ளைப்பாட்டு
1007. இந்துஸ்தானிச் சொல்
1008. உள்ளுறை
1009. துள்ளலோசை
1010. வினா வழு
1011. சிருங்கார நிலை
1012. பிள்ளையார்
1013. ஆரிடமணம்
1014. இளம்பூரணர்
1015. இரண்டு
1016. பன்னாடு தந்த மாறன்வழுதி
1017. புறத்திணை
1018. பூதஞ்சேந்தனார்
பொதுத் தமிழ்
தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக விளங்கிய தொல்காப்பியம், நன்னூல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,
பதினெண்கீழ்கணக்கு நூல்கள், நீதி இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், கம்பராமாயணம், தமிழுக்கு தொண்டாற்றிய
அறிஞர்கள், உரையாசிரியர்கள், இக்கால இலக்கியங்களான புதினம், கவிதை, சிறுகதைகள், சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்கள், விருது பெற்ற கவிஞர்கள், தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள் மற்றும் தமிழ் மொழியில்
அறிவியல் சிந்தனைகள் அடங்கிய வினாக்கள் பொதுத் தமிழ் பகுதியில் இடம்பெறுகின்றன. நூறு மதிப்பெண்களைக் கொண்ட இந்த பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
50 சதவீத மதிப்பெண்களை கொண்ட பகுதி என்பதால் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பதில் இப்பகுதிக்கு முக்கிய பங்குண்டு. கடும் போட்டி நிலவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மொழிப்பகுதி பாடத்தில் நூற்றுக்கு 95 மதிப்பெண் பெறுவது வெற்றியை உறுதிப்படுத்தும். இந்த பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்களை தவறாமல் வாசித்திருக்க வேண்டும். இங்கு தரப்பட்டுள்ள வினா-விடைகளோடு நின்றுவிடமால், அது தொடர்புடைய தகவல்களையும் திரட்டி குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.
- ஸ்டாலின்
ஈவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையம், மேற்கு தாம்பரம், சென்னை.

No comments:

Post a Comment