Saturday, December 13, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை
டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வில், 100 பொது அறிவு கேள்விகளில் 25 கேள்விகள் திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்காவது சரியாக விடையளிப்பது அவசியமாகும்.
எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கன அளவு, தர்க்கவியல், புதிர், பகடை, எண் மற்றும் எழுத்துக்களின் தொடர் வரிசையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதாலும், நேரத்தை விழுங்கும் கேள்விகள் என்பதாலும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி குறித்து அச்சம் நிலவுகிறது. உண்மையில் மற்ற பாடங்களை விட இந்த பகுதி எளிமையானதாகும். முறையாக கற்பதோடு, தொடர் பயிற்சி எடுத்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு கேள்விக்கு குறைந்தபட்சம் 30 வினாடிகள் முதல் அதிக பட்சம் 1 நிமிடத்துக்குள் விடைகாண முயற்சிக்க வேண்டும்.
மற்ற பாடங்கள் போல் அல்லாமல், இப்பகுதிக்கு தொடர் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 2012 முதல் TNPSC தேர்வு களில் கேட்கப்பட்ட திறனறிதல் பகுதி கேள்விகளை போட்டுப் பழக வேண்டும். பயிற்சியின்போது தவறான விடை கிடைத்தாலும் கூட அது ஒருவகையில் நல்லதேயாகும். அந்த தவறு தேர்வின்போது வராமல் பார்த்துக் கொள்ள பயிற்சி உதவும்.
இலக்கியம், கலை என எந்த புலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு வரை படித்த கணிதமே இந்த பகுதிக்கு போதுமானது ஆகும். இங்கு வினா-விடைகளோடு விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு விடைத்தாள்கள் மற்றும் மாதிரி விடைத்தாள்களில் பயிற்சி பெறலாம்.
ராஜபூபதி, ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
அரும்பாக்கம், சென்னை-16
டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42

No comments:

Post a Comment