1551. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்
A) ஹர்ஷர் காலம் B) அசோகர் காலம் C) கனிஷ்கர் காலம் D) சந்திரகுப்த மவுரியர் காலம்
1552. பின்வரும் கருத்து யாருடையது? “சிந்து சமவெளி மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்”
A) D.D. கவுசாம்பி B) R.D. பானர்ஜி C) சர் ஜான் மார்ஷல் D) சர் மார்டிமர் வீலர்
1553. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்
A) வின்சென்ட் சாமிக்கண்ணு B) எஸ்.எஸ்.வாசன் C) ஆர். நடராஜ முதலியார் D) தாதா சாஹேப் பால்கே
1554. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?
A) மயில் B) மரகதப் புறா C) குயில் D) சிட்டுக்குருவி
1555. நமது தேசியப் பாரம்பரிய விலங்கு எது ?
A) புலி B) பசு C) யானை D) சிங்கம்
1556. தமிழ் நாட்டின் முதல் வண்ணத் திரைப்படம்
A)அடிமைப் பெண் B) ராஜராஜ சோழன் C) தில்லானா மோகனாம்பாள் D) அலிபாபாவும் 40 திருடர்களும்
1557. தமிழின் முதல் ‘சினிமாஸ்கோப்’ திரைப்படம்
A) ராஜராஜ சோழன் B) சிவந்த மண் C) விஸ்வரூபம் D) நாடோடிமன்னன்
1558. ‘சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தை’ உருவாக்கிய தலைவர்
A) ப. ஜீவானந்தம் B) தந்தை பெரியார் C) ம. சிங்காரவேலர் D) அறிஞர் அண்ணா
1559. தமிழகத்தில் மகாமகம் நடைபெறும் இடம் எது?
A) திருக்கடையூர் B) மதுரை C) கும்பகோணம் D) பூம்புகார்
1560. சுயமரியாதைத் திருமணங்கட்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது
A) எம்.ஜி.ஆர் அரசு B) கலைஞர் அரசு C) அண்ணா அரசு D) காங்கிரஸ் அரசு
1561. தமிழகத்தில் திருவள்ளுவர் ஆண்டு முறை எந்த ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ?
A) 1974 B) 1971 C) 1981 D) 1975
1562. வடக்கு எல்லைப் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்
A) ராஜாஜி B) சர். தியாகராயர் C) பனகல் அரசர் D) ம.பொ. சிவஞானம்
1563. இனவாரி இட ஒதுக்கீட்டு அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்ட ஆண்டு
A)1931 B) 1911 C) 1921 D) 1919
1564. சங்க கால அரசர்களில் ‘ஏழிசை வல்லவன்’ என்று போற்றப்பட்டவன்
A) பாண்டியன் நெடுஞ்செழியன் B) கரிகாலன் C) கோச்செங்கணன் D) சேரன் செங்குட்டுவன்
1565. சங்க காலத்தில் புனித மரமாக எந்த மரம் கருதப்பட்டது ?
A) நாகலிங்கம் B) அரச மரம் C) ஆல மரம் D) வேம்பு
1566. பின்வரும் இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க.
A) தமிழரசுக் கழகம் - ம.பொ. சிவஞானம் B) தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி - எஸ்.எஸ். இராமசாமி
C) காமன் வீல் கட்சி - அன்னிபெசன்ட் D) தமிழ் தேசியக் கட்சி - ஈ.வெ.கே. சம்பத்
1567. பின்வரும் சிவபெருமானின் ஆடல் சபைகளை சரியாகப் பொருத்தவும்.
பட்டியல்-1 பட்டியல்-2
a) கனக சபை 1. மதுரை மீனாட்சி ஆலயம்
b) ராஜ சபை 2. திருக்குற்றாலம்
c) சித்திர சபை 3. திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்
d) தாமிர சபை 4. திருவாலங்காடு
e) ரத்தின சபை 5. சிதம்பரம் நடராசர் ஆலயம்
குறியீடு:
a b c d e
A) 4 1 5 3 2
B) 4 1 5 2 3
C) 1 2 3 5 4
D) 1 2 3 4 5
1568. தமிழகத்தில் முதன் முதலில் சத்துணவுத் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?
A) எட்டையபுரம் B) விருதுப்பட்டி C) வத்தலகுண்டு D) ஈரோடு
1569. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாள் எப்போது கொண்டாடப்பட்டது ?
A) 1965, ஜனவரி 26 B) 1950, ஜுலை 18 C) 1968, ஜனவரி 23 D) 1950, மே 10
1570. தமிழகத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் எங்கு அமைந்துள்ளது ?
A) திருத்தணி B) திருச்செங்கோடு C) திருவாலங்காடு D) திருச்செந்தூர்
1571. நடுகல் வழிபாடு எப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன?
A) நாட்டுப்புறப் பாடல் B) பக்திப் பாடல்கள் C) நீதிப் பாடல்கள் D) சித்தர் பாடல்கள்
விடைகள்
1551. D
1552. B
1553. C
1554. B
1555. C
1556. D
1557. A
1558. B
1559. C
1560. C
1561. A
1562. D
1563. C
1564. B
1565. D
1566. C
1567. B
1568. A
1569. D
1570. B
1571. A
Thanks for the post!!
ReplyDeleteKashmiri Literature Syllabus