Saturday, December 13, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 46

1353. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) எந்த வருடம் தேசியமயமாக்கப்பட்டது A) 1956 B) 1955 C) 1949 D) 1921
1354. ஐ.ஏ.டி.பி(IADP)ன் விரிவாக்கம் A) மிகுந்த விளைச்சல் தரும் பயிர்த் திட்டம் B) மாநில தீவிர வேளாண்மை திட்டம் C) மாவட்ட தீவிர வேளாண்மை திட்டம் D) இந்திய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
1355. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு A) 2001 B) 2000 C) 2002 D) 2003
1356. மதிப்பு கூட்டப்பட்ட வரியை (Value Added Tax) முதலில் அறிமுகப் படுத்திய நாடு A) பிரான்ஸ் B) இங்கிலாந்து C) ஸ்வீடன் D) இந்தியா
1357. புதிய தொழிற்சாலைகள் திட்டம் (New Industrial Policy) எப்போது உருவாக்கப்பட்டது A) ஜீலை 1991 B) ஜீலை 1992 C) ஆகஸ்ட் 1993 D) நவம்பர் 1990 1358. இந்தியாவில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் யார் A) மகலனோபிஸ் B) தாஸ் குப்தா C) ஹெராடு டோமர் D) ஜவகர்லால் நேரு
1359. ‘கரும்பலகைத் திட்டம் ’எந்த கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டது A) தேசியக் கல்விக் கொள்கை(1956) B) தேசியக் கல்விக் கொள்கை(1968) C) தேசியக் கல்விக் கொள்கை(1992) D) தேசிய எழுத்தறிவு இயக்கம்
1360. இந்தியாவில் பணக் கொள்கையை (Monetary Policy) வெளியிடுவது / வெளியிடுபவர் A) ரிசர்வ் வங்கி B) உள்துறை அமைச்சகம் C) வர்த்தக அமைச்சர் D) நிதித் துறை அமைச்சரகம்
1361. மக்கள் தொகை பெருக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர் A) ஆல்பிரட் மார்ஷல் B) ராபின்சன் C) தாமஸ் மால்தஸ் D) சாமுவேல்சன்
1362. ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் ’ (1934) என்ற நூலை எழுதியவர் A) தாதாபாய் நெளரோஜி B) நரேந்திர நாத் பட்டாச்சர்யா C) சர் விசுவேசுவரய்யா D) ஜவகர்லால் நேரு
1363. உலகளாவிய நிதி வணிக பரிமாற் றத்தில் தங்கத்தாள் (Paper Gold) என அழைக்கப்படுவது A) பண கையிருப்பு விகிதம்(CRR) B) சொந்த கையிருப்பு விகிதம்(SLR) C) சிறப்பு வரைவு உரிமை(SDR) D) மாறுபட்ட வட்டி வீதம் (DRI)
1364. சமூக பாதுகாப்பு சட்டத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட முதலாவது சட்டம் A) தொழிலாளர்கள் இழப்பீடு சட்டம் B) இந்திய தொழிற்சங்க சட்டம் C) சுரங்க சட்டம் D) தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
1365. ஜவகர் வேலை வாய்ப்புத்திட்டம் (JRY) எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டது A) 1979 B) 1980 C) 1983 D) 1989
1366. பண வீக்கத்தின் போது என்ன நிகழும் A) கடன் வாங்கியவர் பாதிக்கப்படுவர் B) கடன் கொடுத்தவர் பயன் அடைவர் C) வியாபாரிகள் இலாபம் ஈட்டுவர் D) தொகுப்பூதியம் பெறுபவர்கள் பயன் அடைவார்கள்
1367. முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் 20 அம்ச திட்டம் (TPP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது A) 1970 B) 1975 C) 1978 D) 1980 1368. ‘பசுமைப்புரட்சி’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் A) வில்லியம் எஸ். காய்டு B) எம்.எஸ். சுவாமிநாதன் C) நார்மன் போர்லாக் D) சி.எஸ். சுப்ரமணியம்
1369. வறுமை கோட்டை ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி A) டண்டவாலா கமிட்டி B) டி. டி. லக்டவாலா கமிட்டி C) ஆர். ராதாகிருஷ்ணன் கமிட்டி D) பகவதி கமிட்டி
1370. ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM BANK) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு A) 1980 B) 1982 C) 1988 D) 1892
1371. ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது A) ஹாங்காங் B) மணிலா C) டாக்கா D) காத்மண்டு
1372. ‘க்யாட்’ (Kyat )என்பது எந்த நாட்டின் நாணய செலவாணி A) மியான்மர் B) பூடான் C) சிங்கப்பூர் D) மலேசியா 1373. ஐ.ஆர்.டி.பி (IRDP)திட்டம் கிராமத்தில் உள்ள எந்த பிரிவு மக்களுக்காக உருவாக்கப்பட்டது A) நிலமற்ற உழைப்பாளர்கள் B) சிறு மற்றும் குறு விவசாயிகள் C) கிராம கைவினையர்கள் D) இவை அனைத்தும்
1374. ஒரு அட்டவணையின் நிரை தலைப்புகளை குறிப்பிடும் முறை A) உப-தலைப்புகள் B) குறிப்பு விவரங்கள் C) தலைப்பு குறிப்புகள் D) நிரைகளின் தலைப்புகள்
1375. பங்கு வர்த்தகத்தில் ‘முனைம வேட்டையாளர்’ என அழைக்கப் படுபவர் A) கலைமான் (Stag) B) கரடி (Bear) C) காளை (Bull) D) முட வாத்து (Lame duck)
1376. பொது மக்களிடம் உள்ள புழக்கப்பணம் என்பது A) M1 B) M2 C) M3 D) M4
1377. எந்நிலையில் ஒரு நிறுவனம் சம நிலை பெறும் A) MR=AR B) MR=AC C) MC=MR D) MC=AC
1378. மறைமுக வேலையின்மை அதிகம் காணப்படும் தொழில் A) பருத்தி துணி உற்பத்தி ஆலை B) கட்டிடத் துறை C) வேளாண்மைத்துறை D) சர்க்கரை தொழிற்சாலை
1379. கீழ்க்கண்டவற்றில் எவை நேர்முக வரி அல்ல A) வருமான வரி B) விற்பனை வரி C) சொத்து வரி D) தீர்வை வரி 1380. ‘போலி வாரம்’ என்ற கருத்தின் ஆசிரியர் A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) ரிக்கார்டோ D) சாமுவேல்சன்
விடைகள்
1353. B 1354. C 1355. B 1356. A 1357. A 1358. A 1359. C 1360. A 1361. C 1362. C 1363. C 1364. A 1365. D 1366. C 1367. B 1368. A 1369. B 1370. B 1371. B 1372. A 1373. D 1374. C 1375. A 1376. A 1377. C 1378. C 1379. B 1380. B

No comments:

Post a Comment