Wednesday, July 10, 2013

சென்டோகிராஃபி தெரியுமா?



பொதுவாக காமிராவில் புகைப்படம் எடுப்போம். ஆனால் காமிராவில் புகைப்படத்திற்குப் பதிலாக வாசனையை பதிவு செய்ய முடிந்தால்?! எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா. அப்படி ஒரு காமிராவை ஒரு பெண் ஆராய்ச்சியாளர் வடிவமைத்துள்ளார். லண்டனில் இருக்கும் சென்ட்ரல் செயின்ட் மார்டின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏமி ராட்கிளிப் உருவாக்கியுள்ள இந்த இயந்திரத்திற்குப் பெயர் மேடலின் (Madeleine ).

பிறந்தநாள் கேக்கின் வாசனையையும், காதலியின் ஷாம்பூவின் நறுமனத்தையும் இது போல் இன்னும் பல மனதிற்கு நெருக்கமான நறுமனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் இந்த காமிராவில் என்கிறார், இதனை வடிவமைத்த ஏமி ராட்கிளிப்.

எப்படி பயன்படுத்த வேண்டும்: இந்த சென்டோகிராஃபியில் ஒரு ஃபனல் இருக்கிறது. நீங்கள் எந்த பொருளின், எந்த இடத்தின் வாசனையை பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதன் மீது அந்த ஃபனலை வைக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு வகை குழாய் அந்த பொருளின்/இடத்தில் இருக்கும் மனத்தை தன்னகத்தே பதிவு செய்து கொள்ளும். டெனக்ஸ் (Tenax) எனும் ஒரு வகை பாலிமர் டேப்பில் அந்த வாசனை பதிவாகும்.

இந்த உபகரணம் கிட்டத்தட்ட ஒரு எலக்ட்ரானிக் மூக்கைப் போன்றது என வர்ணிக்கப்படுகிறது. எப்படி போட்டோ பில்மிகளை லேப்களில் கொடுத்து பிரின்ட் செய்வோமோ அதே மாதிரி வாசனை பதிவான உபகரணத்தை இதற்காக உள்ள பிரத்யேக லேப்களில் கொடுத்து பதிவாகி இருக்கும் நறுமனத்தை ஒரு சிறு குப்பியில் அடைத்துப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் விரும்பும் போது அதனை நுகர்ந்து பார்த்து. உங்கள் மறக்க முடியாத தருணங்களை நினைவு படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment