* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்
* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
No comments:
Post a Comment