Saturday, November 10, 2012

டி.இ.டி - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 1



திருக்குறள்

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை

1.
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.
பொருட்பால்  -  70 அதிகாரங்கள்
3.
காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.


திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்

1.
பரிமேலழகர்
2.
தருமர்
3.
மல்லர்
4.
மணக்குடவர்
5.
திருமலையர்
6.
தாமத்தர்
7.
கவிப்பெருமாள்
8.
பரிதி
9.
காளிங்கர்
10.
நச்சர்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

1.
நாயனார்
2.
தேவர்
3.
முதற்பாவலர்
4.
தெய்வப்புலவர்
5.
நான்முகனார்
6.
மாதானுபங்கி
7.
செந்நாப்போதார்
8.
பெருநாவலர்

திருக்குறளின் வேறு பெயர்கள்
1.
முப்பானூல்
2.
உத்தரவேதம்
3
தெய்வ நூல்
4.
திருவள்ளுவம்
5.
பொய்யாமொழி
6.
வாயுறை வாழ்த்து
7.
தமிழ் மறை
8.
பொதுமறை

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10)

         நூல்                         பாடல்கள்           -                   திணை

1. நற்றிணை               - 400 +1                         -அகம்2. குறுந்தொகை         - 400+1                          -அகம்
3.
ஐங்குறுனூறு         - 500+1                           -அகம்
4.
அகநானூறு             - 400+1                           -அகம்
5.
கலித்தொகை         - 400+1                          - அகம்
6.
புறநானூறு                 -400+1                           - புறம்
7.
பதிற்றுப்பத்து              10+10                            - புறம்
8.
பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது
.
   
நூல்      -         தொகுத்தவர்     -       தொகுப்பித்தவர்
 
நற்றிணை              --------           -  பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை     - பூரிக்கோ               -  ------------------
ஐங்குறுநூறு       - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு         - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை        - நல்லந்துவனார்     - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் செரியவில்லை.

பத்துப்பாட்டு
              
நூல்                                          புலவர்
1.
திருமுருகாற்றுப்படை           - நக்கீரர்
2.
பொருநராற்றுப்படை              - முடத்தாமக் கண்ணியார்
3.
பெரும்பாணாற்றுப்படை          - உருத்திரங்கண்ணனார்
4.
சிறுபாணாற்றுப்படை                 - நல்லூர் நத்தத்தனார்
5.
மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்

அகநூல்கள்
6.
குறிஞ்சிப்பாட்டு             - கபிலர்
7.
முல்லைப்பாட்டு            - நப்பூதனார்
8.
பட்டினப்பாலை             - உருத்திரங்கண்ணனார்

புறநூல்கள்
9.
நெடுநெல்வாடை           - நக்கீரர்
10.
மதுரைக்காஞ்சி            - மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)

    
நூல்                       -----------              ஆசிரியர்
1.
நாலடியார்                            - சமண முனிவர்கள் 
2.
நான்மணிக்கடிகை             - விளம்பிநாகனார்
3.
இன்னா நாற்பது                    - கபிலர்
4.
இனியவை நாற்பது             - பூதஞ்சேந்தனார்
5.
திரிகடுகம்                              - நல்லாதனார்
6.
ஆசாரக்கோவை                 - பெருவாயிற் முள்ளியார்
7.
பழமொழி                             -  முன்றுறை அரையனார்
8.
ஏலாதி                                   -  காரியாசான்
9.
முதுமொழிக் காஞ்சி          - கூடலூர்க் கிழார்
10.
திருக்குறள்                         - திருவள்ளூவர்

அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது                       - மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது                  - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது                        - மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது    - கணிமேதாவியார்
கைந்நிலை                                   - புல்லங்காடனார்
கார்நாற்பது                                   - கண்ணங்கூத்தனார்

புறநூல் - 1
களவழி நாற்பது                          - பொய்கையார்

தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம்  - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம்   - கபாடபுரம்
கடைச்சங்கம்   - தற்போதைய  மதுரை

காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.
முதல் காப்பியம்
2.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.
குடிமக்கள் காப்பியம்
4.
தேசியக்காப்பியம்
5.
முத்தமிழ்க் காப்பியம்

காண்டங்கள் மொத்தம் 30, காதைகள் மொத்தம் 30
1.
புகார்க் காண்டம்   -10
2.
மதுரைக் காண்டம் - 13
3.
வஞ்சிக் காண்டம்   -7
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.
முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.
எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்

ஐம்பெருங்காப்பியங்கள்
1.
சிலப்பதிகாரம்   - இளங்கோவடிகள்
2.
மணிமேகலை   - சீத்தலைச் சாத்தனார்
3.
சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4.
வளையாபதி      ---------------------
5.
குண்டலகேசி    - நாதகுத்தனார்

ஐஞ்சிறு காப்பியங்கள்
1.
சூளாமணி              - தோலாமொழி தேவர்
2.
நீலகேசி                                  -----------------------
3.
உதயணகுமார காவியம்   ----------------------
4.
யசோதா காவியம்              ----------------------
5.
நாககுமார காவியம்           ----------------------
 *
திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
 *
திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி

நாயன்மார்கள் அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1.
சம்பந்தர்           - திருக்கடைக்காப்பு
2.
நாவுக்கரசர்       - திருத்தாண்டகம்
3.
சுந்தரர்                - தேவாரம்
4.
மாணிக்கவாசகர்   - திருவாசகம்திருக்கோவை, திருவெம்பாவை
5.
திருமூலர்          - திருமந்திரம்
6.
சேக்கிழார்         - பெரியபுராணம்

ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்

பன்னிரு ஆழ்வார்கள்
1.
பொய்கையாழ்வார்
2.
பூதத்தாழ்வார்
3.
பேயாழ்வார்
4.
திருமழிசையாழ்வார்
5.
பெரியாழ்வார்
6.
ஆண்டாள்
7.
நம்மாழ்வார்
8.
மதுரகவியாழ்வார்
9.
திருப்பாணாழ்வார்
10.
திருமங்கையாழ்வார்
11.
தொண்டரடிப்பொடியாழ்வார்
12.
குலசேகர ஆழ்வார்

No comments:

Post a Comment