Saturday, November 24, 2012

உணவு விஷமாவதை சரி செய்ய எளிய வழிகள்

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஏராளமான இனிப்புகளும், உணவுகளும் செய்யப்படும் காலம் இது. இந்த சமயத்தில் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை உணவு விஷமாதல் தான்!

பொதுவாகவே புட
் பாய்சன் ஏற்பட்டால், அதனால் வாந்தி, பேதி, வயிற்று வலி, வயிறு எரிச்சல், லேசான காய்ச்சல், தலைவலி, தசைவலி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்படும்.

இதுபோன்ற புட்பாய்சன் பிரச்னைகளை தீர்க்க எளிய வழிகள் உள்ளன.

இஞ்சி சாறு

இஞ்சி சாறினை தேனில் கலந்து உட்கொள்ளலாம். அல்லது இஞ்சியை தேனில் தொட்டு மென்று சாப்பிடலாம். அது முடியாதவர்கள் இஞ்சி கலந்த தேனீரை அருந்தலாம். இவ்வாறு செய்வதால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகச் சாறு
 
 சீரகப் பொடி சேர்த்து சூப் குடிப்பது அல்லது சீரகத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனை அருந்துவதால் வாந்தி நிற்கும்.

துளசிச் சாறு
 
 துளசியை வெறுமனே எடுத்து வாயில் போட்டு மென்றால் கூட உடனடியாக அஜீரணக் கோளாறுகள் சரியாகும். புட் பாய்சன் அதிகமாக இருந்தால், துளசிச் சாறினை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது, உணவு உண்ட பிறகு ஏற்படும் பிரச்சினையாக இருப்பின், துளிச் சாறு எடுத்து அதனை தேனுடச் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு

புட் பாய்சனால் வயிற்றில் ஏற்பட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உள்ளது. எனவே, எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து குடித்தால் வயிற்று உபாதைகள் குறையும். முடிந்தால் எலுமிச்சை கலந்து தேனீர் அருந்தலாம். மேலும், வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடனடியாக புத்துணர்ச்சி அடைய முடியும்.

புதினாச் சாறு
 
 புதினாச் சாறு வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. புதினாச் சாறை டீயுடன் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அஜீரணக் கோளாறு அதிகமாக இருப்பவர்கள் புதினாச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.

- By Vanisri Sivakumar, சென்னை

No comments:

Post a Comment