காரணத்தினால்
தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல
பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான
முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை
பின்பற்றுங்களேன்.
வெந்தையம்
வெந்தையம்
நீரிழிவு
நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு
முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில்
குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும்.
ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.
இயற்கை ஜூஸ்
இயற்கை ஜூஸ்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின்
ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸி டென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ்
ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம்.
மாமரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக
பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்
நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை
பொடிசெய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை
ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உண
வருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.
சப்பாத்தி சாப்பிடுங்க
சப்பாத்தி சாப்பிடுங்க
நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள
உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை
சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம்
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
மூலிகை கசாயம்
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.
மூலிகை கசாயம்
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.
No comments:
Post a Comment