Wednesday, November 28, 2012

இறைவனுக்கு நன்றி



ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை.ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை.நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.
உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா,தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.''என்று கூறி வணங்கினார்.

பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.எழுந்து உட்கார்ந்த அவன்,''குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.

சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,''யார் அப்படி சொன்னது?இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார்.அற்புதமான தாகத்தைக் கொடுத்தார்.அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.

''
இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள். வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என குருவிடம் சீடன் கேட்டான்.

குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார். எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.

''
பரவாயில்லை,நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்' 'எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.

''
இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல.

நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,'' என்றார் குரு.

No comments:

Post a Comment