Saturday, November 10, 2012

டி.இ.டி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 20



*   குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு
*   குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
*   ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்.

*   பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் சதவீதம் - 60-80%
*   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
*   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு - மனச்சிதைவு
*   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை
*   உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் - சாக்ரடீஸ்
*   ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
 *   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
*   குழந்தை உளவியல் என்பது - பொது உளவியல்
*   மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது - மரபுநிலையும், சூழ்நிலையும்.

*   ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
*   நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் - வெஸ்ச்லர்
*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும். இது - ஒத்திருக்கும் விதியாகும்.
*   ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் - கிரிகோர் மெண்டல்
*   ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்
*   கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
*   அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
*   ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
*   சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
*   அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை
*   ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்

*   ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
*   அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
*   உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
*   குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
*   சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*   வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
*   மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
*   அடிப்படை மனவெழுச்சி - சினம்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.

*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*   குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
*   சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
*   குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
*   பியாஜே கூறும் அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது.
*   அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.

*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.

*    நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)

*   கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.

*   கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.

*   ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

*   வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.


*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.

*   கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

*   சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.

*   ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்

*   ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து

*    மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.

No comments:

Post a Comment