Saturday, November 10, 2012

டி.இ.டி - கல்வியியல் பகுதி 1



1.பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை
2.ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
3.வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
4.மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல்
5.சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
6.பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் -
அறிவு வளர்ச்சி பற்றியது
7.அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்
8.காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
9.பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை

10.மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
1.ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
2.நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5
3.பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
4.ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்
5.முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
6.தலையிடாமைஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது -
கட்டுப்பாடு இல்லாமை
7.நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்
8.கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
9.புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
10.வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
1.தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
2.முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
3.மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
4. ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி
5. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்
6.தேக்கம்
என்பது - ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது

7.இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்
8.ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி
9.மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
10.கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி குழந்தை
1.கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுவதும்
2.உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
3.சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
4.கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
5.கல்வி வாய்ப்பில் சமத்துவம் என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி,
கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை
குறுக்கீடாக அமையக்கூடாது.
6.தற்சோதனை என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் -
தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற
மனசாட்சியற்ற அனுபவம்
7.புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி
8.எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
9.பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு
10.மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
1.School and Society ஆசிரியர் - ஜான்டூயி
2.WAIS எனப்படுவது - Wechsler's Adult Intelligence Scale
3.DIET எனப்படுவது - District Institute of Education and Training
4.கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
5.மூளைச் சக்தி வீணாக்குதல் என்பது - கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்
6.ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் -  எரஸ்மாஸ்
7.கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
8.கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்
9.விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
10.தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு 1948
1.கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
2.
ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
3.
தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
4.
ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
5.
மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
6.
மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
7.
ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
8.
எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
9.
குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
10.
சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.

1.பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம்
காப்பான்.
2.
பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
3.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
4.
வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
5.
இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
6.
ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
7.
பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
8.
நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
9.
இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
10.
பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி

1.Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
2.The School of Tomarrow
என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
3.Freedom and Culture
என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
4.Discovery of the Child
என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
5.
மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
6.Education for a Better Social Order
என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல்
7.
ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள
வைஸ்டன்
8.
நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
9.
கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
10.
தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy


1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
2.
ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
3.
நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
4.
சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

5.
வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
6.
ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா

7.
பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
8.
முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
9.
குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
10.IGNOU
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985

1.SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
2.10+2+3
என்ற கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1979
3.
மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
4.
ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் -
எரஸ்மஸ்
5.
கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
6.
இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் - டீர்னிக் வெட்
போடவேண்டும்
7.
பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம் எனவும்
8.
கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம் எனவும்
9.
பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
10.
கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்

1.டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
2.முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
3.மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
4.தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
5.Aha experience என்பது - உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை
புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
6.விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote
memory or Blind memory)
7.பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
8.நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
9. நுண்ணறிவு ஈவு =மனவயது / காலவயது * 100
10.முட்டாள்களின் நுண்ணறிவு ஈவு - 0 – 20

1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT
5.யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -ஏ.எஸ்.நீல்

1.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
2.
மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
3.
குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
4.PERSONALITY
என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
5.
மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்
6.
உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
7.
இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்
8.
வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5
9.
குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
10.
ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு

1.மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை
2.பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை
3.ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை
4.சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
5.சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
6.சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
7.பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
8.பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
9.நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி
10.சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்
1.கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35
10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்

1.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
2.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
3.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே
4.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
5.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
6.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
7.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப்
8.டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
9.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே
10.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் அரவிந்தர்

1.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்
2.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
3. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
4.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
5.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை

6.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
7.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்
8.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
9.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
10.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல்.

1.Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
2.ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
3.பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி
4.ரூஸோவின் தத்துவம் - இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம்
5.பேதையர் - 50 - 70
6. மூடர்கள் - 20-50
7.முட்டாள்கள் - 0-20
8.நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
9.The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - Skinnar
10.உட்காட்சி மூலம் கற்றல் கோஹ்லர்

No comments:

Post a Comment