Friday, November 23, 2012

Just டு Miss டு!!

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் மிதப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் மிதக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.

துறவி ஒவ்வொரு நாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீரடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லிதருமாறு கேட்டனர்.

அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்று தருவதாக சொன்னார், அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது ஏன் அவனால் முடியவில்லை என கேட்டார்கள்.

அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன். என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன், அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்து சென்றுவிட்டது என்றார். இது தான் அந்த Just டு Miss டு!!

No comments:

Post a Comment