Friday, November 23, 2012

நாகரிகம் என்ற பெயரில் இன்றைய பெண்களின் நிலை !!!



இன்றைய காலத்தில் மாராப்பு என்பதற்கு மரியாதையே இல்லை. சுடிதார், சல்வார் அணிகிறார்கள், மாராப்பு துணியாக பயன்படுத்
வேண்டிய துப்பட்டாவை வைத்து கழுத்தை மறைக்கிறார்கள். மார்பை எடுப்பாக காட்டுகிறார்கள். கழுத்து என்ன மார்பைவிட கவர்ச்சி நிறைந்ததா? புரியவில்லை. மிகச் சிலரே துப்பட்டாவை சரியாக அணிகிறார்கள். அதில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா.

சென்னை நகரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் தென்படுகிறார்கள். பணி, படிப்பு நிமித்தமாக சாலைகள் முழுக்க பெண்கள் நின்றபடி, நடந்தபடி, வாகனங்களில் பயணித்தபடி இருக்கிறார்கள். இது, இரவு வரை கூட நீளுகிறது. இளம்பெண்கள் பெரும்பாலும் அழகாக தெரிகிறார்கள் என்பதைவிட, கவர்ச்சியாக தங்களைத் தெரிவிக்கிறார்கள்.

வாலிப நண்பனோடு டூவீலரில் பயணிக்கும் பெரும்பாலான இளம்பெண்களின் பயணம் இப்படியாகத்தான் இருக்கிறது… ‘பின்னால் அமர்ந்திருக்கும் இளம்பெண் தனது மார்ப்பை வாகனம் ஓட்டும் ஆணின் முதுகில் நெருக்கி அழுத்தாமல் பயணிப்பதில்லை.அவ்வாறு பயணிக்கும் பெண்களில் பலர் இறுக்கமான ஜீன்ஸ், டிசார்ட் அணிகிறார்கள். ஆணை இறுக்கி அனைக்கும் அப்பெண்ணின் ஜீன்ஸ் கீழ் இறங்கி, அவளது பிட்டத்தை அப்படியே நிர்வாணப்படுத்துகிறது. பின்னால் வண்டி ஓட்டும் வாகனக்காரர்களில் சிலர் சங்கப்படுகிறார்கள். பலர் டிராபிக் டென்ஷனில் இது சின்ன ரிலாக்ஸ்என கருதுகிறார்கள்.

பழையகாலம் மாதிரி பாவடை தாவணி வேண்டாம். புடவையும் பணிச் சூழலுக்கு வசதியான உடையல்ல. சுடிதார், சல்வார் கமீசு சரியான உடைதான். ஜீன்ஸ், பேண்ட், சட்டை, டீசார்ட் தாராளமாக அணியட்டும். இதெல்லாம் பெண்களுக்கு வசதியானதே. நவீன உடைகளை வரவேற்போம். ஆனால் அவ்வுடைகளை அழகாக அணியலாமே. கவர்ச்சியாக அணிய வேண்டிய அவசியமென்ன? நோக்கமென்ன? அதுதான் விளங்கவில்லை.

முன்பு திரைப்படங்களில் கூட கதாநாயகியாக தோன்றுபவர் அழகாக மட்டுமே காட்சியளிப்பார். கவர்ச்சியாக காட்சியளிக்க தனிப் பாத்திரத்தை உருவாக்குவார்கள். இப்போது கதாநாயகியே கீழிறங்க வேண்டியதாகிவிட்டது. அதுபோல சமூகமும் மாறிவிட்டதா? கவர்ச்சி என்பது ஆபாசத்தின் தொடக்கம். அதன் அளவு எந்த கணம் வேண்டுமானாலும் மாறுபடும். ஆபாச உணர்வால் உந்தப்படும் ஆண்கள் தனது எண்ண உணர்வுகளால் அக்காட்சியை எச்சில் படுத்துகிறான். அண்மையில் அறிவியல் ஆய்வு ஓன்று ஐம்பது வயதுக்கு மேலான ஆண்களுக்கு சாலையில் காணப்படும் இத்தகைய காட்சிகளால் மனதில் ஏக்க அழுத்தம் ஏற்பட் வழிவகுக்கிறது எனக் கூறுகிறது. பாவ புண்ணியக்கணக்குகள் படி யோசித்தால் இத்தகைய கவர்ச்சிப் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆண்களை ஆளாக்குவதன் மூலம் பாவத்தைச் சிறிதளவேனும் சம்பாதிக்கிறார்கள் என்றே கூறலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வயதுக்கு வந்த மகளின் உடையை, அவளது தாய் மிக கவனமுடன் கண்காணிப்பாள். மார்பு எடுப்பாக தெரியும்படி உடை உடுத்த அனுமதிக்கமாட்டாள். மாராப்பு விலகினால் எட்டியிருந்தே ஜாடை செய்வாள்.

அதற்கு விளக்கம் ஒரு கிராமத்து தாயிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அத்தாய் சொன்னாள். ‘ ‘பலரது கண்பட்டால் பின்னாளில் குழந்தைக்கு தாய்பால் குறைந்துபோகுமின்னு வழிவழியா ஒரு நம்பிக்கை என்றாள்.

இப்பொழுது பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் லெக்கின்ஸ் எனும் ஒருவகை இறுக்கமான உடை உடுத்துகிறார்கள். உள்ளதை உள்ளபடி இறுக்கிகாட்டும் உடையாக அது அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச இரவு நடனம் ஆடுவோர், கரகாட்டம், குறத்தியாட்டம் என்ற பராம்பரிய கலையைத் தவறான முறையில் ஆபாச நடனமாக மாற்றியாடும் பெண்கள் இத்தகைய லெக்கின்ஸை அணிந்திருந்தனர். அந்த உடை இப்போது நவீனப் பெண்களின் உடையாகி வருகிறது. இதனால் அத்தகைய நடனம் ஆடுவோர் அந்த லெக்கின்ஸூம் அணியாமல் தற்போது, ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது போல

உடை விஷயம் இப்படி என்றால்வட இந்திய நவீனப்பெண்கள் வேறு மாதிரி சபதம் செய்கிறார்கள். பூனம் பாண்டே என்றொரு நடிகையாம், கிரிக்கெட்டில் அவள் விரும்பிய அணி ஜெயித்துவிட்டதாம் உடனே நிர்வாண போஸ் தருகிறாள். இன்னொரு நடிகை மேலாடையை மட்டும் அவுக்கிறேன் என்கிறாள். ஆக போட்டி போட்டு ஆடை அவிழ்க்கும் நிகழ்வுகள் வடநாட்டில் தொடங்கிவிட்டது. ஆக அடுத்த பத்தாண்டுகளில் நவீனப் பெண்கள் பிராவும், கால்சட்டையும் மட்டுமே அணிந்த நிலையில், சென்னை சாலைகளில் உலா வரும் வாய்ப்பு தாராளமாக தெரிகிறது.

உடை விஷயத்தில் பெண்களை குறித்து எழுதும் அதேவேளையில் ஆண்கள் குறித்து எழுத வேண்டியுள்ளது. அது மிகக்குறிப்பாக ஆலயங்களில் இளம் ஆண் குருக்கள்கள் மேலாடை இன்றி இருப்பது. அதுவும் ஒருவித கவர்ச்சியே. குடுமியில் இருந்து மெல்ல கிராப்புக்கு மாறி வருபவர்கள், உடை விஷயத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஜிப்பா போன்று ஒரு மேலாடை அணிதல் நன்று. அதேபோல் கேரளா, தமிழகம், இலங்கையில் உள்ள சில ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுக்குச் செல்லும் ஆண்களைச் சட்டையைக் கழற்ற சொல்கிறார்கள். இதுவும் தவிர்கப்பட வேண்டிய ஓன்றாகும் .

நன்றி
கோவை ராஜா

No comments:

Post a Comment