Friday, November 9, 2012

டி.இ.டி - ஆசிரியர் தகுதித் தேர்வு உயிரியல் வினாக்கள்



1.பூக்கும் தாவரத்தின் பெயர்

அ. கிரிப்டோ கேம்கள்
ஆ. பெனரோ கேம்கள்
இ. தலோஃபைட்டா
ஈ. பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்

அ. புல்
ஆ. கீழாநெல்லி
இ. அவரை
ஈ. செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது

அ. ஆர்.என்.ஏ.
ஆ. டி.என்.ஏ.
இ. ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ
ஈ. இவற்றில் எதுவுமில்லை
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்

அ. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்ற அலகில் அளக்கப்படுகிறது
ஆ. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
இ. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
ஈ. அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:

அ. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
ஆ. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
இ. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
ஈ. அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

அ. லெம்னா
ஆ. உல்ஃபியா
இ. அல்லி
ஈ. சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு

அ. தாலஸ்
ஆ. ஹைப்பா
இ. குறு இழை
ஈ. மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு

அ. அனாடமி
ஆ. எம்பிரியாலஜி
இ. மைக்காலஜி
ஈ. சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது

அ. புல்லி
ஆ. சூலகம்
இ. அல்லி
ஈ. மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை

அ. ரைசோபஸ்
ஆ. லைக்கன்கள்
இ. செர்க்கோஸ்போரா
ஈ. அகாரிகஸ்

11. சிறுகுடலின் நடுப்பகுதி

அ. ஜெஜீனம்
ஆ. இலியம்
இ. முகுளம்
ஈ. எபிதீலியம்

12. உமிழ்நீரில் காணப்படும் நொதி

அ. டயஸ்டேஸ்
ஆ. சைமேஸ்
இ. டயலின்
ஈ. கிளிசைன்

13. பொருத்துக:

I. லியூக்கோ சைட் - 1. இரத்தம் உறைதல்
II. திராம்போசைட் - 2. பாப்பில்லரி தசைகள்
III. வெண்ட்ரிக்கிள் - 3. நண்டு
IV. புறச்சட்டகம் - 4. கிராணுலோசைட்

அ. I-2 II-3 III-1 IV-4
ஆ. I-4 II-1 III-2 IV-3
இ. I-3 II-2 III-4 IV-1
ஈ. I-1 II-3 III-4 IV-2

14. கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

அ. 8
ஆ. 7
இ. 4
ஈ. 6

15. பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்

அ. பிலாஸ்செரி
ஆ. கிராஸ்பெரி
இ. பெப்ரைன்
ஈ. மஸ்கார்டைன்

16. ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்

அ. கார்பன் - டை - ஆக்சைடு
ஆ. குளோரோ புளூரோ கார்பன்
இ. நைட்ரஜன் - டை - ஆக்சைடு
ஈ. ஹைட்ரஜன் சல்பைடு

17. யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு

அ. கண்புள்ளி
ஆ. உட்கரு
இ. கசையிழை
ஈ. நுண்குமிழி

18. மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்

அ. 206
ஆ. 210
இ. 208
ஈ. 216

19. இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்

அ. டியோடினம்
ஆ. பைலோரஸ்
இ. கணையம்
ஈ. பித்தபை

20. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து

அ. கார்போ ஹைட்ரேட்
ஆ. புரதம்
இ. கொழுப்பு
ஈ. வைட்டமின்

21. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?

அ. டி.ஏ.பி.
ஆ. யூரியா
இ. சூப்பர் பாஸ்பேட்
ஈ. காம்போஸ்ட்

22. பின் வருவனவற்றில் எதை தடுப்பூசியால் தடுக்க முடியாது?

அ. பெரிய அம்மை
ஆ. சர்க்கரை வியாதி
இ. போலியோ
ஈ. கக்குவான் இருமல்

23. பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது யாருடைய குரோமோசோம்களால் தீர்மானிக்கப்படுகிறது?

அ. தந்தை
ஆ. தாய்
இ. தந்தை மற்றும் தாய்
ஈ. தாத்தா

24. ஆயுர்வேதம் என்பது

அ. உடல் நலம் பற்றிய தீர்மானம்
ஆ. நோய் தீர்க்கும் புத்தகம்
இ. குணமாக்கும் அறிவியல்
ஈ. வாழ்வு பற்றிய அறிவியல்

25. வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்

அ. கெரல் வினெயெஸ்
ஆ. டேக்ஸனர்
இ. லியுவென்ஹாக்
ஈ. பெர்லினர்

26. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்

அ. விட்டாகர்
ஆ. ஸ்டேன்லி
இ. வில்லியம் ஹார்வி
ஈ. ஜேம்ஸ்வாட்

27. உடல் உஷ்ண நிலையை சீராக்குவது

அ. தோல்
ஆ. தண்ணீர்
இ. நுரையீரல்
ஈ. கேசம்

விடை: 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27.

No comments:

Post a Comment