Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 72

எண் வினா விடை
121.யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ______________ கோப்பை வழங்கப்படும்?ஹென்றி டுயூலானி
122. ஹென்றி டுயூலானி என்பவர் யார்? இவர் தான் 1960 ஆம் ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து போட்டியை முதலில் துவக்கி வைத்தவர் 
123. 1972 ஆம் ஆண்டு சாம்பியனான மேற்கு ஜெர்மனி, 1976 ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் எந்த அணியிடம் தோற்றது? செக்கோஸ்லோவாகியா 
124. கடந்த 2008 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து கோப்பையை வென்ற அணி? ஸ்பெயின் 
125. தொடர்ச்சியாக ______ முறை யூரோ கால்பந்து கோப்பையை எந்த அணியும் வென்றது இல்லை? மூன்று 
126. யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இரு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் யாவை? டென்மார்க் (1992), நெதர்லாந்து (1988), பிரான்ஸ் (1984), இத்தாலி (1968) 
127. யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி எது? ஜெர்மனி 1972-ல் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 
128. எந்த நாட்டைச் சார்ந்த சிஸ்டிமாஷியாம் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது? ரஷ்யா 
129. மியான்மர் நாட்டின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் யார்? ஆங்சான் சூகி 
130. தமிழகத்தின் தற்போதைய பொதுத் துறைச் செயலாளர் யார்? சாய்குமார் 
131. 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமராக்க நான் தயாராக இருந்தேன் என்று அப்துல் கலாம் எந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்? திருப்பு முனை 
132. தற்போதைய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பா.ஜ. தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளரும் யார்? சரத்யாதவ் 
133. மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய கவர்னர் யார்? ராம் நரேஷ் யாதவ் 
134. மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்? சிவராஜ் சிங் சவுகான் 
135. சமீபத்தில் சிகரெட் நிறுவன நிகழ்ச்சியை எதிர்த்து எந்த அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர்? பசுமைத் தாயகம் 
136. சமீபத்தில் வெள்ளி விழா கொண்டாடிய பல்கலைக்கழகம் எது? தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் 
137. சமீபத்தில் அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் எந்த பூங்கா பெரும் பாதிப்புக்குள்ளானது? காசிரங்கா தேசிய பூங்கா 
138. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் எத்தனையாவது ஏவுதளம் அமைக்க சமீபத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது? 
139. தற்போதைய மத்திய உருக்குத் துறை அமைச்சர் யார்? பெனி பிரசாத் வர்மா 
140. சமீபத்தில் இந்தியாவையும், இந்திய அரசையும் அவதூறாக பேசிய பிரபல தொழில் அதிபர் யார்? லட்சுமி மிட்டல் 

No comments:

Post a Comment