எண் | வினா | விடை |
401. | முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் பிறந்த நாள்? | ஜூலை 10, 1949 |
402. | ஒலிம்பிக் போட்டி துவக்கத்தின்போது இசைக்கப்படும் பாடலை இயற்றியவர் யார்? | ஸ்பைரோஸ் சமராஸ் |
403. | ஒலிம்பிக் போட்டி துவக்கத்தின்போது இசைக்கப்படும் பாடல் எந்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ பாடலாக விளங்குகிறது? | 1957 முதல் |
404. | எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகள் டெலிவிஷனில் காண்பிக்கப்பட்டன? | 1936 |
405. | எந்த போட்டிகள் காலம் காலமாக தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளது? | ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு வீசுதல் |
406. | எந்தெந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன? | போலோ, கிரிக்கெட், கோல்ப், டக் அப் வார் எனப்படும் கயிறு இழுக்கும் போட்டி |
407. | 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த நாடுகள் பங்கேற்றன? | பெல்ஜியம், ஹாலந்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் |
408. | பார்வைக் குறைவுடைய மாற்றுத் திறனாளிகள் பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு வசதியாக எந்த கருவியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்? | மேக்னிபையர் |
409. | மேக்னிபையர் கருவியை எந்தெந்த சாதனங்களில் பொருத்தி தாங்கள் படிக்கும் புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை பெரிதாக்கி எளிதாக படிக்க இயலும்? | கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டி.வி.க்கள் |
410. | ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் யார்? | ஜெகன் மோகன் ரெட்டி |
411. | நம் நாட்டில் எத்தனை போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது? | 4.5 லட்சம் |
412. | சோலாபூர் எந்த மாநிலத்தில் உள்ளது? | மகாராஷ்டிரா |
413. | கூச்பேகர் பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது? | மேற்கு வங்காளம் |
414. | சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள இ-பேப்பர்? | பில்லியன் பீட்ஸ் |
415. | அப்துல் கலாமின் பில்லியன் பீட்ஸ் இ-பேப்பர் இதுவரை எந்த இணையதளத்தில் வெளியாகி வந்தது? | அப்துல்கலாம் டாட் காம் |
416. | அப்துல்கலாம் இணையதளத்தில் வெளியாகி வந்த பில்லியன் பீட்ஸ் இ-பேப்பர் தற்பொழுது பேஸ்புக்கின் எந்த தளத்தில் வெளியிடப்படுகிறது? | www.facebook.com/kalambillionbeats |
417. | மகாத்மா காந்திக்கு “தேசப் பிதா” என்ற பட்டத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை. சரியா? தவறா? | சரி |
418. | சந்தவுசி ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? | உத்தரபிரதேசம் |
419. | பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் ரீதியில் செயலற்றவர் என்று யார் விமர்சனம் செய்துள்ளார்? | பால்தாக்கரே (சிவசேனா தலைவர்) |
420. | தற்போதைய ரயில்வே டி.ஐ.ஜி யார்? | தினகரன் |
Monday, April 21, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 86
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment