Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 82

எண் வினா விடை
321. ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ள கள்ள நோட்டுக்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை விளக்கும் புதிய வெப்சைட்?www.paisaboltahai.rbi.org.in
322. ஜனாதிபதி தேர்தலில் எந்த மாநிலங்களின் மொத்த ஓட்டுக்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப்புக்கே கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது? கேரளா, திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் 
323. சமீபத்தில் எந்த இடங்களுக்கிடையே புதிய வான்வழியைப் பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது? திருச்சி-சிங்கப்பூர் 
324. திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு எந்த நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றனர்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டைகர் ஏர்வேஸ் 
325. இனிமேல் சிங்கப்பூர், கோலாலம்பூர் விமானங்கள் எந்த வான் வழியாக திருச்சி வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? நாகை, தஞ்சை வான் வழியாக 
326. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்களின் வங்கிக் கணக்கில் (பாட்னாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில்) பணம் செலுத்திய நெல்லைக் காரர் யார்? ராமநாதன் 
327. சமீபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட எந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது? சரண்யா 
328. 2014-ல் எங்கு விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன? சோச்சி (ரஷ்யா) 
329. முதன்முறையாக பெண்களை ஸ்கீ ஜம்பிங் போட்டிகளில் எப்போது சேர்க்கப்படவுள்ளனர்? 2014-ல் ரஷ்யாவில் நடைபெற உள்ள விண்டர் ஒலிம்பிக் போட்டியில் 
330. லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருக்கும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார்? பரத் செட்ரி 
331. இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்? எஸ்.எம்.கிருஷ்ணா 
332. பாகிஸ்தானின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்? ஹினா ரப்பானி 
333. பிரதமர் மன்மோகன் எதிர்பார்த்த சாதனை எதையும் செய்யவில்லை என்று அமெரிக்காவின் எந்த பத்திரிக்கை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளது? டைம் பத்திரிக்கை 
334. சமீபத்தில் ஜி-20 மாநாடு எங்கு, எப்போது நடந்தது? மெக்சிகோ, ஜீன் மாதம் 
335. ஜி-20 என்றால் என்ன? குரூப்-20 
336. ஜி-20 மாநாட்டில் யார் கலந்து கொள்வார்கள்? 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி கவர்னர்கள் 
337. முதல் ஜி-20 மாநாடு எங்கு, எப்போது தொடங்கப்பட்டது? அமெரிக்கா (2008) 
338. ஜி-20 மாநாட்டில் இந்தியா எப்போது உறுப்பினராக சேர்ந்தது? 2009 (இங்கிலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில்) 
339. ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள்? ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்ஸிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன் 
340. ஜி-20 ன் முதல் மாநாட்டில் இந்தியா இடம்பெறவில்லை. சரியா? தவறா? சரி 

No comments:

Post a Comment