Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 90

எண் வினா விடை
481. புளூட்டோவின் சந்திரன்கள் எந்த தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது?ஹப்பிள் தொலைநோக்கி
482. புளூட்டோ குறுங்கோளின் ஐந்தாவது சந்திரனின் வடிவம்? ஒழுங்கற்ற வடிவம் 
483. புளூட்டோ குறுங்கோளின் ஐந்தாவது சந்திரனின் விட்டம் (சராசரியாக)? 10 முதல் 25 கிலோமீட்டர் வரை 
484. புளூட்டோவிற்கு நாசா ஆய்vவு மையம் அனுப்பி உள்ள விண்கலம்? நியூ ஹொரைசான் 
485. நியூ ஹொரைசான் விண்கலம் எந்த ஆண்டு புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது? 2015 
486. தன்னுடைய மகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எந்த பெண் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார்? ஓம் சாந்தி சர்மா 
487. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில எல்லையோரத்தில் உள்ள எந்த சர்ச்சைக்குரிய பகுதியை யூனியன் பிரதேசமாக்க மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளது? பெல்காம் 
488. தற்போதைய மகாராஷ்டிர முதல்வரின் பெயர் என்ன? பிரிதிவ் ராஜ் சவான் 
489. சமீபத்தில் அக்னி-1 ஏவுகணை சோதனை எங்கு நடத்தப்பட்டது? ஒடிஷா மாநிலம் பாலாசூர் 
490. அக்னி-1 ஏவுகணையின் சிறப்பம்சம்? அணு ஆயுதங்களைத் தாங்கி 700 கி.மீ. பாய்ந்து தாக்கும் 
491. தமிழகத்தின் தற்போதைய பால் வளத்துறை அமைச்சர் யார்? வி.மூர்த்தி 
492. தற்போது தமிழகத்தில் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எத்தனை லட்சம் லிட்டர் வரை எட்டியுள்ளது? 26 லட்சம் 
493. சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது? 10 லட்சத்து 80 ஆயிரம் 
494. எந்தெந்த எல்லைப் பிரச்சினைகளை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண பாகிஸ்தான் ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹினா ரபானி சமீபத்தில் தெரிவித்தார்? சியாச்சின், சர் கிரீக் 
495. எதிர்கால போர்களின் போது, ராணுவ வீரர்களுக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்தும் ஆராய்ச்சி நடந்து வருவதாக யார் சமீபத்தில் கூறினார்? விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை 
496. எந்த கூட்டணிதான் உலகில் “சூப்பர் பவர்என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி சமீபத்தில் தெரிவித்தார்? இந்தியா,சீனா கூட்டணி 
497. இந்துக் கடவுளான சிவன் அவதரித்த ஸ்தலத்தின் பெயர்? கைலாஷ்-மானசரோவர் 
498. 25 ஆகஸ்ட், 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வயது என்ன? 60 
499. அனுமதி பெறாமல் சினிமா போர்டு வைத்ததால், எந்த பாலிவுட் நடிகருக்கு மும்பை மாநகராட்சி ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது? ஷாருக்கான் (ரா ஒன் திரைப்பட விளம்பர போர்டு) 
500. நக்சல் பிரச்சினை வளர்வதற்கு அரசு மற்றும் அரசு நிர்வாகத்தில் புரையோடிருக்கும் ஊழல் தான் முக்கியக் காரணம் என யார் சமீபத்தில் கூறியுள்ளார்? பாபா ராம்தேவ் 

No comments:

Post a Comment