எண் | வினா | விடை |
581. | தென்மண்டல நெட்பால் போட்டியில் எந்த அணி கோப்பையைத் தட்டிச் சென்றது? | தமிழக பெண்கள் அணி |
582. | லண்டன் ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டி எந்த குளத்தில் நடக்க இருக்கிறது? | ஸ்லோலம் |
583. | ஒலிம்பிக்கில் மகளிர் மட்டுமே பங்கேற்கும் இரண்டு போட்டிகள் என்ன? | சிங்கரனைஸ்ட் ஸ்விம்மிங், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் |
584. | அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையின் பெயர்? | சுனிதா வில்லியம்ஸ் |
585. | சுனிதா வில்லியம்ஸ் அவரது 2வது விண்வெளி பயணத்தை என்று தொடங்கினார்? | 15.07.2012 |
586. | சுனிதா வில்லியம்ஸின் தந்தை எப்பகுதியைச் சார்ந்தவர்? | குஜராத் மாநிலம் |
587. | சுனிதா வில்லியம்ஸின் தாய் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | ஸ்லோவேனியா |
588. | சுனிதா வில்லியம்ஸ் எங்கு பிறந்தவர்? | அமெரிக்கா |
589. | சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு எந்த ஆண்டு முதல் முறையாக பயணம் செய்தார்? | 2006 |
590. | சுனிதா வில்லியம்ஸ் முதன் முதலாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு எந்த விண்கலத்தில் சென்றார்? | டிஸ்கவரி விண்கலம் (அமெரிக்கா) |
591. | சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் முதல் முறையாகச் சென்ற போது எத்தனை நாட்கள் தங்கியிருந்து பணிபுரிந்தார்? | 195 |
592. | விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த பெண் யார்? | சுனிதா வில்லியம்ஸ் |
593. | சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் 2வது முறையாக எங்கிருந்து பயணம் மேற்கொண்டார்? | பைகானூர் விண்வெளி ஆய்வு மையம் (கஜகஸ்தான், ரஷ்யா) |
594. | “இந்த விண்வெளி பயணத்தின் போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி பார்த்து ரசிக்கப் போகிறேன்” என்று கூறியவர் யார்? | சுனிதா வில்லியம்ஸ் |
595. | ”எளிமையாக வாழ்வது எப்படி என்பதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்” என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு யார் அறிவுறுத்தியுள்ளார்? | ஹபீஸ் சயீத் |
596. | டெசோ மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? | இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதிற்காக |
597. | தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? | ஜஸ்வந்த் சிங் |
598. | சமீபத்தில் வரியில்லாத பட்ஜெட்டை யார் தாக்கல் செய்தார்? | புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி |
599. | இன்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படும் எலெக்ட்ரானிக் பணபரிமாற்றத்திற்கான கட்டணங்களை எந்த வங்கி குறைத்துள்ளது? | ரிசர்வ் வங்கி |
600. | சமீபத்தில் காமராஜரின் எத்தனையாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது? | 110 வது பிறந்த நாள் |
Monday, April 21, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 95
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment