Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 77

எண் வினா விடை
221. ஒலிம்பிக் இசை நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த எந்த குழு பங்கேற்றது?ஸ்டக் காட்டோ
222. ஒலிம்பிக் இசை நிகழ்ச்சியில் சென்னை இசைக் குழுவைத் தேர்வு செய்தவர்? ஸ்லம்டாக் மில்லியனர் பட்த்தின் இயக்குனர் டேனி பாயல் 
223. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட அணிகளில் இருந்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்து ______________ அணி தேர்வு செய்யப்பட்டது? யூபா 
224. 2012 ஆம் ஆண்டிற்கான “யூபாஅணியில் எந்த அணியைச் சேர்ந்த 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்? ஸ்பெயின் 
225. யூரோ கோப்பை-2012 கால்பந்து போட்டியின் நட்சத்திர வீரர் யார்? ஆன்ட்ரஸ்ட் இனியஸ்டா (ஸ்பெயின்) 
226. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது? பீஜிங் 
227. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சைக்கிள் பந்தயங்கள் எங்கு நடத்தப்பட்டன? சீனப் பெருஞ்சுவர் 
228. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக பீஜிங்கில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான ஸ்டேடியங்கள்? பேர்ட்ஸ் நெஸ்ட், வாட்டர் கியூப் 
229. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு புதிய விளையாட்டுக்கள் யாவை? 1) 10 கி.மீ. மாரத்தான் நீச்சல் போட்டி
2) பி.எம்.எக்ஸ் எனப்படும் பைசைக்கிள் மோட்டோகிராஸ்
 
230. தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் ஷீ இல்லாமல் (வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள) பங்கேற்கும் இந்திய வீரர்கள்? இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பசந்த் பகதூர் ராணா (நேபாளம்), இர்பான் (கேரளா) 
231. சமீபத்தில் தமிழகத்தின் எந்த ஊர்களுக்கிடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது? மன்னார்குடி-திருப்பதி
232. தற்போதைய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் யார்?  முகுல் வாஸ்னிக்
233.பொது கொள்முதல் கொள்கைமூலம் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 
234. ரூ 5 ஆயிரத்திற்கு புதிய லேப்டாப் ஒன்றை எந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது? ஏ.சி.ஐ. (அலையட் கம்ப்யூட்டர் இண்டர்நேசனல்)  
235. சமீபத்தில் அமெரிக்காவுக்கு “ஏவுகணைமிரட்டல் விடுத்துள்ள நாடு எது? ஈரான் 
236. அமெரிக்காவுக்கான தற்போதைய இந்திய தூதர் யார்? நிருபமா ராவ் 
237. விடுதலைப் புலிகளின் நிர்வாக நகரம் எது? இலங்கையின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கிளி நொச்சி 
238. சமீபத்தில் கவர்னர் ரோசய்யா எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடினார்? 79 
239. சமீபத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த எங்குள்ள சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்தனர்? ஈரோடு (காவிரி ஆற்றை மாசுபடுத்தியதால்) 
240. ஆந்திராவில் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகன் யார்? ஜெகன்மோகன் ரெட்டி 

No comments:

Post a Comment