Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 75

எண் வினா விடை
181. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வில்வித்தை வீராங்கனை?தீபிகா குமாரி
182. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனை? தேவேந்திர சிங், மேரி கோம் 
183. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் வீரர்? ககன் நரங் 
184. ஐ.நா.வின் உலகின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் _________________ மலைத் தொடர் சேர்க்கப்பட்டுள்ளது? மேற்குத் தொடர்ச்சி 
185. 2012 மே 31-ல் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை ஏற்றவர்? பிக்ரம் சிங் 
186. சோமாலியா கடல் கொள்ளையர்களால் அடிக்கடி கப்பல்கள் சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் எந்தெந்த நாட்டின் கடற்படை சமீபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்? இந்தியா, சீனா, ஜப்பான் 
187. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கு பாராகிளைடிங் பயிற்சி அளித்த நாடாக தீவிரவாதி அபு ஹம்சா சமீபத்தில் கூறிய நாடு? சீனா 
188. தீவிரவாதி அஜ்மல் கசாப் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்? ஆர்தர் சிறைச்சாலை 
189. அமெரிக்காவின் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி? ஹெட்லி 
190. மும்பை தாக்குதல் சதியில் பாக். ராணுவத்தைச் சேர்ந்த யார் யாருக்கு தொடர்பு உண்டு என ஹெட்லியும், அபு ஹம்சாவும் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளனர்? மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி, மேஜர் கர்னல் ஷா 
191. அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் எந்த கட்சி ஆதரித்தது? எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை 
192. அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரித்தவர் யார்? மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) 
193. காரைக்கால் அம்மையார் கோயிலில் சமீபத்தில் நடந்த திருவிழா? மாங்கனி திருவிழா 
194. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு ஏவுகணை அணுகுண்டு தயாரிப்பில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய அரசியல் அனுபவம் அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது எனக் கூறியவர் யார்? பால் தாக்கரே (சிவசேனா தலைவர்) 
195. தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் யார்? முகுல்ராய் (திரிணாமுல் காங்கிரஸ்) 
196. 2012 ஆம் ஆண்டில் துணை ஜனாதிபதி தேர்தல் என்று நடந்தது? ஆகஸ்ட் 7 
197. தற்போதைய துணை ஜனாதிபதி யார்? ஹமீது அன்சாரி 
198. சமீபத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் எத்தனை சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்? 500 சீட் 
199. தற்போதைய தமிழக கவர்னர் யார்? ரோசய்யா 
200. பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்த கட்சியின் பெயர் இல்லையென்று சமீபத்தில் புகார் எழுந்தது? தே.மு.தி.க (விஜயகாந்த்) 

No comments:

Post a Comment