Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 88

எண் வினா விடை
441. மண்ணச்சநல்லூர் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?திருச்சி
442. கர்நாடக மாநிலத்தின் கவர்னர் பெயர்? பரத்வாஜ் 
443. கர்நாடக முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டார் சமீபத்தில் என்று பதவியேற்றார்? 12.07.2012 
444. சமீபத்தில் காலமான பிரபல மல்யுத்த வீரர் யார்? தாராசிங் 
445. பிரபல மல்யுத்த வீரர் தாராசிங் எங்கு பிறந்தார்? பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், தர்முசாக் கிராமம் 
446. சர்வதேச புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள்? தாராசிங் (இந்தியா), கிங்காங் (ஆஸ்திரேலியா), ஜார்ஜ் கோர்டியன்கோ (கனடா), ஜான் டிசில்வா (நியூசிலாந்து) 
447. இந்திய தொழில் முறை மல்யுத்த சாம்பியன் பட்டத்தை தாராசிங் எந்த ஆண்டு வென்றார்? 1953 
448. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த சாம்பியன் பட்டத்தை தாராசிங் எந்த ஆண்டு கைப்பற்றினார்? 1959 
449. மல்யுத்த போட்டிகளில் இருந்து தாராசிங் எந்த ஆண்டு ஓய்வு பெற்றார்? 1983 
450. மல்யுத்த வீரர் தாராசிங் நடித்த முதல் திரைப்படம்? சாங்டில் (ஹிந்தி-1952) 
451. தாராசிங் ஜோடியாக 16 படங்களில் நடித்த நடிகை? மும்தாஜ் 
452. தாராசிங் நடித்ததில் புகழ்பெற்ற திரைப்படங்கள்? பவுலாத், வீர் பீம்சென், ஹெர்குலஸ், ஆந்தி அவுர் துபான், டார்ஜன் கம்ஸ் டு டில்லி, டார்ஜன் அண்ட் கிங்காங் 
453. தாராசிங் கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்? மேரா நாம் ஜோக்கர், ஆன்ந்த், அஜுபா, தில்லகி, கல் ஹோ நா ஹோ 
454. “மரத்படத்தில் அமிதாப் பச்சனுக்கு தந்தையாக நடித்தவர் யார்? பிரபல மல்யுத்த வீரர் தாராசிங் 
455. தாராசிங் நடித்த ஒரே தமிழ்படம்? மாவீரன் (ரஜினிக்கு தந்தையாக) 
456. தாராசிங் நடித்த கடைசி திரைப்படம்? ஜப் வீ மெட் (கரீனா கபூரின் தாத்தாவாக) – 2007 
457. தாராசிங் மொத்தம் எத்தனை படங்களில் நடித்துள்ளார்? 140 
458. 1986 ஆம் ஆண்டில் ராமானந்த் சாகர் தயாரித்த “ராமாயணம்டி.வி. சீரியலில் தாராசிங் எந்த வேடத்தில் நடித்தார்? அனுமார் 
459. பா.ஜ வில் சேர்ந்து ராஜ்யசபா நியமன எம்.பி.யாக தாரா சிங் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை பதவி வகித்தார்? 2003 முதல் 2009 வரை 
460. மல்யுத்த வீரர் தாராசிங் என்று மரணமடைந்தார்? 12.07.2012 (காலை 7:30) 

No comments:

Post a Comment