Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 93

எண் வினா விடை
541. டேபிள் டென்னிஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர்?பீட்டர் கார்ல்சன்
542. உலக கபடி போட்டிகள் எங்கு எப்போது நடைபெற உள்ளது? பஞ்சாப் (டிசம்பர் 1 முதல் 15 வரை) 
543. தற்போதைய பஞ்சாப் மாநில துணை முதல்வர் யார்? சுக்பிர் சிங் பாதல் 
544. சிரியாவின் எந்த பகுதியில் உள்ள கிராமத்தின் மீது சமீபத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர்? ஹமா 
545. பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் என்று இறந்தார்? 11, நவம்பர் 2004 (பாரீஸ் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில்) 
546. பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் எந்த விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதாக ஜோர்டான் டாக்டர் தெரிவித்துள்ளார்? பொலோனியம் விஷம் 
547. யாசர் அராபத் விஷம் கொடுத்துக் கொள்ளப்பட்டதாக ஜோர்டானைச் சார்ந்த எந்த டாக்டர் சமீபத்தில் கூறியுள்ளார்? டாக்டர்.அப்துல்லாஹ் அல் பஷீர் 
 548. அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் ஜம்பாலோ பகுதியில் எந்த ரக விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கியது? டுகானோ
549. கடந்த ஏப்ரல்-மே காலகட்டத்தில் எத்தனை சதவீதம் அளவுக்கு நேரடி அன்னிய முதலீடு குறைந்துள்ளது? 37 சதவீதம் 
550. 45 வது ஆசியன் மாநாடு எங்கு, எப்போது நடந்தது? பினோம்பென் நகர் (கம்போடியா)-12.07.2012 
551. சமீபத்தில் நடந்த 45 வது ஆசியன் மாநாட்டில் எத்தனை நாடுகள் பங்கேற்றன? 10 தெற்காசிய நாடுகள் 
552. சமீபத்தில் நடந்த ஆசியன் மாநாட்டில் எந்த விவகாரத்தால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் மோதலில் முடிந்தது? தென்சீனக் கடல் விவகாரம் 
553. தென்சீனக் கடல் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று எந்த நாடுகள் சமீபத்தில் நடந்த ஆசியன் மாநாட்டில் வாதிட்டன? சீனா-பிலிப்பைன்ஸ் 
554. 45 ஆண்டு கால வரலாற்றில் கூட்டறிக்கை வெளியிடப்படாமலேயே எந்த ஆசியன் மாநாடு முடிவடைந்தது? 45 வது ஆசியன் மாநாடு (12.07.2012) 
555. ஜூலை 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி திருச்சி மாவட்ட கலெக்டர் யார்? ஜெயஸ்ரீ 
556. கவர்னர் ரோசைய்யா ஜூலை 12, 2012-ல் தமிழகத்தின் எந்த கோயிலில் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்? திருச்சி ரங்கநாதர் கோயில் 
557. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஹமீது அன்சாரி (தற்போதைய துணை ஜனாதிபதி) 
558. துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார்? 1) கோபால் கிருஷ்ண காந்தி (மேற்கு வங்க முன்னாள் கவர்னர், மகாத்மா காந்தியின் பேரன்)
2) கிருஷ்ணா போஸ் (முன்னாள் எம்.பி, சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸ் உறவினர்) 
559. தமிழ்நாடு மலையாளிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த திருவிழாவின் பெயர்? இளைஞர் திருவிழா 
560. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் பிரிவு புதியதாகத் தொடங்கி வைக்கப்பட்டது? சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment