Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 76

எண் வினா விடை
201. உலக புத்தகக் கண்காட்சி சமீபத்தில் எங்கு நடைபெற்றது?டில்லி
202. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? 2 ஆம் இடம் 
203. விற்பனை ஆவணங்களைப் பதிவு செய்யும் போது, சொத்தின் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு இருந்தால் இனி முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை? ரூ. 25 ஆயிரம் வரை 
204. கோடியக்காடு கடற்கரை எங்குள்ளது? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 
205. வக்கீல்கள் உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவித்துள்ளது? 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 
206. தற்போதைய உலகத் தமிழர் பேரவைத் தலைவர் யார்? இரா.ஜனார்தனம் 
207. தற்போதைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் யார்? ஜெயபால் ரெட்டி 
208. தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை அமைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும் அதிகாரிகள்? கெய்ல் அதிகாரிகள் 
209. சமீபத்தில் எந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது? தூத்துக்குடி அனல் மின் நிலையம் குறிப்பு: இதற்கு முன்பும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இதே போன்ற விபத்து ஏற்பட்டுள்ளது
210. சமீபத்தில் எந்த மாவட்டத்தில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது? நீலகிரி 
211. தற்போது திவாலாகும் நிலையில் எந்த மாநிலத்தின் நிலைமை உள்ளது? ஆந்திரா 
212. பாலியல் பலாத்கார குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடம் வகிப்பதாக தேசிய ஆவணக்குழு புள்ளி விவரத்தில் கூறியுள்ளது? மத்திய பிரதேசம் 
213. சமீபத்தில் எந்த நிறுவன பைலட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்? ஏர் இந்தியா 
214.தற்போதைய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் யார்?அஜீத் சிங் 
215. சமீபத்தில் எந்த தடகள வீராங்கனை ஆணா, பெண்ணா என்று கண்டறிய சோதனை நடந்தது? பிங்கி பிராம்னிக் 
216. எந்த மாநிலத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு எம்.எல்.ஏ வும் சொகுசு கார் வாங்க அந்த மாநில முதல்வர் அனுமதி அளித்தார்? உத்தரப்பிரதேசம் 
217. தற்போதைய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யார்? அகிலேஷ் யாதவ் 
218. அரசு உதவி பெறாத பள்ளிகளை உதவி பெறும் பள்ளிகளாக கேரள அரசு மாற்றுவதை கண்டித்து யார் ஆர்ப்பாட்டம் செய்தனர்? பாரத வித்யார்த்தி பரிஷத் 
219. 2012-ல் நடந்த யூரோ கால்பந்து கோப்பையை வென்ற அணி எது? ஸ்பெயின் 
220. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்று முதல் என்று வரை நடைபெறவுள்ளது? ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை 

No comments:

Post a Comment