Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 91

எண் வினா விடை
501. 1987-ல் நான் சபரிமலைக்கு சென்றிருந்தேன். அப்போது சன்னிதானத்துக்குள் நுழைந்து ஐயப்பன் விக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன்என்று யார் கூறினார்?நடிகை ஜெய்மாலா
502. ஜோத்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது? ராஜஸ்தான் 
503. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல, காமன்வெல்த் போட்டி முறைகேட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள எந்த காங்கிரஸ் எம்.பி. க்கு சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது? சுரேஷ் கல்மாடி 
504. டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எப்போது நடந்தது? 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 
505.புதுச்சேரியில் தற்போது நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவர் யார்? முதல்வர் ரங்கசாமி 
506. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் என்று “தியாகிகள் தினம்அனுசரிக்கப்படுகின்றது? ஜூலை 13 
507. 1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எந்த விசாரணைக் கைதியை விடுவிக்கப்பட்டதிற்கு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்? அப்துல் காதிர் 
508. 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் ஸ்ரீநகரில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? 22 
509. ஸ்ரீநகரில் 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சுதந்திரத்துக்குப் பின் என்னவென்று பெயர் சூட்டப்பட்டது? தியாகிகளின் கல்லறைத் தோட்டம் 
510. பபுவா ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? பீகார் 
511. தன்பாத் நகர் எந்த மாநிலத்தில் உள்ளது? ஜார்க்கண்ட் 
512. ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை எம்.எல்.ஏ-க்கள், ராஜ்யசபா எம்.பி.க்கள் ஓட்டுப் போட உள்ளனர்? 4120 எம்.எல்.ஏ-க்கள், 776 எம்.பி.க்கள், மொத்தம் 4896 பேர் 
513. ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் ஓட்டுப் போட உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்களில் எத்தனை பேர் கிரிமினல்கள் என்று என்.ஜி.ஓ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது? 1450 பேர் (அ) 31 சதவீதத்தினர் (அ) மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ 
514. என்.ஜி.ஓ என்றால் என்ன? ஜனநாயக ஆராய்ச்சி சங்கம் 
515. ஒலிம்பிக் தீபத்துடன் தேம்ஸ் நதியில் பயணம் மேற்கொண்ட முன்னாள் தங்கப் பதக்க வீரர் யார்? சர் ஸ்டீவ் ரெட்கிரேவ் 
516. லண்டனில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்தை எந்த கடற்கரையில் வரைந்துள்ளனர்? ரோசிலி 
517. சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வலு தூக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியப் பெண்மணி யார்? கர்ணம் மல்லேஸ்வரி 
518. 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க விமானம் ஏற இருந்த எந்த வலு தூக்கும் வீராங்கனைக்கு, முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அவரால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது? மோனிகா தேவி 
519. சமீபத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் யார்? பிரெட் லீ 
520. பிரெட் லீ பிறந்த தேதி? 08.11.1976 

No comments:

Post a Comment