Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 12

எண் வினா விடை
221.இந்தியாவின் நிலப்பரப்பில் சமவெளிகளின் பரப்பு?43%
222. தராய் சதுப்பு நிலம் காணப்படும் பகுதி? வடபெரும் சமவெளிகள் 
223. இந்தியாவில் குளிர்காலம்? டிசம்பர்-பிப்ரவரி 
224. இந்தியாவில் நிலவுவது? வெப்ப மண்டல பருவக்காற்று நிலை 
225. மொத்த பரப்பில் பாதிக்கும் மேல் காடுகளைக் கொண்டுள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி 
226. தமிழகத்தின் நிலப்பயன்பாட்டில் 40% பெற்றுள்ளது? விளைநிலம் 
227. மரபுசாரா சக்திவளத்திற்கு எடுத்துக்காட்டு? சூரிய சக்தி 
228. நகரமயமாதலை ஊக்குவிக்காத காரணி? பொழுதுபோக்கு அம்சங்கள் 
229. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் வாக்குரிமைக்கான வயது வரம்பு 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது? 61 வது திருத்தம் 
230. மாநிலங்களவையில் உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்? 30 
231. மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்? 25 
232. நேரடி மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு? சுவிட்சர்லாந்து 
233. இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1976 
234. வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? வி.குரியன் 
235. பான்ஜியா எத்தனை தட்டுக்களாக உடைக்கப்பட்டுள்ளது? 
236. வெப்ப மண்டலத்தில் விளையும் முக்கிய பயிர் எது? நெல் 
237.மேற்குத் தொடர்ச்சி மலை எந்தெந்த மாநிலங்கள் வரை உள்ளது? குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொடங்கி கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வரை
238. மேற்குத் தொடர்ச்சி மலை எந்தக் கடலை ஒட்டியுள்ளது? அரபிக் கடல் 
239. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளம்? 1600 கி.மீ. 
240. குஜராத் மற்றும் மஹாராஷ்டிரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வேறு எவ்வாறும் அழைக்கப்படுகிறது? சயாத்ரி மலைத் தொடர் 

No comments:

Post a Comment