எண் | வினா | விடை |
141. | திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்? | உலகப்பொதுமறை தெய்வநூல் முப்பால் உத்திரவேதம் பொய்யாமொழி வள்ளுவப்பயன் |
142. | சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்? | குடிமக்கள் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் முதல் காப்பியம் தேசியக் காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் சமுதாயக் காப்பியம் |
143. | சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்? | மணநூல் முக்தி நூல் |
144. | அகநானூற்றின் சிறப்புப் பெயர்? | நெடுந்தொகை |
145. | பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்? | திருத்தொண்டர் புராணம் |
146. | இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்? | குட்டித் தொல்காப்பியம் |
147. | வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்? | நறுந்தொகை |
148. | மூதுரையின் சிறப்புப் பெயர்? | வாக்குண்டாம் |
149. | மணிமேகலையின் சிறப்புப் பெயர்? | மணிமேகலைத் துறவு |
150. | நாலடியாரின் சிறப்புப் பெயர்? | வேளாண் வேதம் |
151. | திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? | தமிழ் மூவாயிரம் |
152. | முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? | அறிவுரைக் கோவை |
153. | தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? | திரு. வி. கலியாண சுந்தரம் |
154. | தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? | உ.வே.சாமிநாதர் |
155. | நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்? | மீனாட்சி சுந்தரனார் |
156. | பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்? | கதிரேசஞ் செட்டியார் |
157. | தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? | பம்மல் சம்பந்தனார் |
158. | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்? | சங்கரதாஸ் சுவாமிகள் |
159. | பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்? | புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில் |
160. | கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்? | தேசிக விநாயகம் பிள்ளை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 8
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment