Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 6

எண் வினா விடை
101.எரியும் மெழுகுவர்த்தியில் காணப்படும் நீல நிறச்சுடர் பகுதி?முழுவதுமாக எரியும் பகுதி
102. காய், பழங்களில் உள்ள எந்த வேதிப்பொருள் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தைக் கொடுக்கிறது? பினாலிக் சேர்மங்கள் 
103. 20 Ca 40 மற்றும் 18 Ar 40 என்ற அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஐசோபார்கள் 
104. கசடு எண்ணெயினை 40 – 60 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பின்ன காய்ச்சி வடித்தலில் உருவாகும் பொருள்? பெட்ரோல் 
105. சேர்மத்தில் உள்ள பகுதி பொருள்களை வேதியியல் முறைப்படி பிரிக்க இயலாது. சரியா? தவறா? தவறு 
106. மாறா விகித விதியினை விளக்கியவர்? ப்ரெளஸ்ட் 
107. ஒளிரும் தன்மை கொண்ட சேர்மம்? சிங்க் சல்பைடு 
108. சோடியம் பை கார்பனேட் என்பது? ரொட்டி சோடா 
109. பல் தொழில் விற்பன்னர்என்றழைக்கப்படும் உடல் உறுப்பு எது? தோல் 
110. மல்பரி பட்டினை உருவாக்கும் பட்டுப் பூச்சியினம்? பாம்பிக்ஸ் மோரி 
111. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கு உதவும் பொருள்? தேன் 
112. அயோடின் குறைவால் ஏற்படும் நோய்? முன்கழுத்துக் கழலை 
113. HIV வைரசைக் கண்டுபிடித்தவர்?இராபர்ட் காலே 
114. இயற்கையின் துப்புரவாளர் எனப்படுவது? பாக்டீரியா 
115. சிறுநீரகத்தின் செயல் திறன் அலகு? நெப்ரான் 
116. மனிதனால் கேட்கக் கூடிய ஒலியின் அளவு? 10 – 120 டெசிபல் 
117. போபால் யூனியன் கார்பைடு உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு? MIC (Methyl Iso Cyanate) - மெத்தில் ஐசோ சயனேட் 
118. கடல் மேற்பரப்பில் காணப்படும் தாவர இன கடல் பாசிகள் _______________ என்று அழைக்கப்படுகின்றன? ஆல்கே 
119. கருப்பு நிறம் உடைய ஒளிபுகும் தன்மை கொண்ட கனிமம் _____________ ஆகும்? மைக்கா 
120. சுரங்க முறை மூலம் வெட்டியெடுக்கப்படும் ________________ பளீர் மஞ்சள் நிறத்தில் காணக் கிடைக்கும் கனிமமாகும்? கந்தகம் 

No comments:

Post a Comment