எண் | வினா | விடை |
161. | நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்? | வெ. இராமலிங்கம் பிள்ளை |
162. | குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்? | அழ. வள்ளியப்பா |
163. | தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்? | சேக்கிழார் |
164. | திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்? | திருஞானசம்பந்தர் |
165. | திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்? | வாகீசர், தருமசேனர், அப்பர் |
166. | மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்? | அமுது அடியடைந்த அன்பர் |
167. | தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்? | சுந்தரர் |
168. | கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்? | கம்பர் |
169. | ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்? | கவிராட்சஸன் |
170. | பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்? | உடுமலை நாராயணகவி |
171. | திரையிசைத் திலகம் யார்? | மருதகாசி |
172. | ____________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்? | கிருஷ்ணதேவராயர் |
173. | தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்? | மெகஸ்தனிஸ் |
174. | ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்? | ஆண்டாள் |
175. | ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்? | திருவள்ளுவர் |
176. | செஞ்சியை ஆண்ட மன்னர்களில் ____________________ தான் புகழ் பெற்ற மன்னன்? | தேசிங்கு ராசன் |
177. | ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது? | தமிழ் |
178. | பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு | பேறு |
179. | பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி | மாட்சி |
180. | ”வானினும்” - இலக்கணக் குறிப்பு தருக? | உயர்வுச் சிறப்பும்மை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 9
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment