Monday, March 24, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 59

எண் வினா விடை
381.கார்டெல் என்றால் என்ன? நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது. 
382. கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை? தங்கம், கச்சா எண்ணை 
383. அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்? அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி 
384. உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்? வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா) 
385. ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன? LONDON INTER BANK OFFER RATE 
386.பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?5
387. தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்? ராஜஸ்தான் 
388. எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது? 1862 
389. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 
390.கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?கர்நாடகா
391. ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது? 1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு 
392. IOC ன் விரிவாக்கம்? International Olympic Committee 
393. எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? 1908 
394. கலைவாணர் பிறந்த ஊர்? ஒழுகினசேரி 
395. சிங்கப்பூரின் தலைநகர்? சிங்கப்பூர் சிட்டி 
396. தமிழ்நாடு அரசு சின்னம்? ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும் 
397. கேரளா அரசு சின்னம்? இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம் 
398. கர்நாடகா அரசு சின்னம்? மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம் 
399. ஆந்திரா அரசு சின்னம்? பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம் 
400. ஆந்திராவில் “மலிச்ச பாலம்என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு? கபடி 

No comments:

Post a Comment