Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 2

எண் வினா விடை
21.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எது?காற்று
22. பூமியில் அனைத்து வகை ஆற்றலுக்கும் மூலம் எது? சூரியன் 
23. உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் இந்தியா பெறும் இடம் எது? 
24. மின் உபயோகத்திற்கு அதிகமாகப் பயன்படுத்த வலியுறுத்தப்படும் விளக்கு எது? சி.எஃப்.எல். விளக்கு 
25. கொசு பரப்பும் நோய்? டெங்கு 
26. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப்பொருள்? முளைக் கட்டிய பயறு வகைகள்
27. வண்ணத்துப் பூச்சி உணவு உண்பதற்கு பயன்படுத்தும் உறுப்பு எது? உறிஞ்சு குழல் 
28. தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஒரே மாதிரி பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? கார்ல் லன்னேயஸ் 
29.வண்ணத்துப் பூச்சிகளுக்கு உடல் உறுப்புகளும், இறக்கைகளும் வளரத் தொடங்கும் பருவம்? கூட்டுப் புழு 
30. வண்ணத்துப் பூச்சிகளுக்கு சுவை உணரும் உறுப்பு எங்குள்ளது? கால்கள் 
31. தேன் கூட்டில் ராணித் தேனீக்களின் எண்ணிக்கை? 
32. உருவத்தில் பெரிய தேனீ எது? ராணித் தேனீ 
33. மரத்தின் வயதை எதைக் கொண்டு அறியலாம்? மரத்திலுள்ள வளையங்கள் 
34. ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை ஊடுபயிராக விளைவிப்பது _______________________ எனப்படும்? கலப்புப்பயிர் சாகுபடி 
35. பச்சையம் இருக்குமிடம்? இலைகள் 
36. குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது? 12 
37. தாவரங்களில் நீராவிப்போக்கு எப்பகுதியில் நடைபெறுகிறது? இலைத்துளைகள் 
38. நீர்த்தாவரங்களில் மிதப்பதற்கு வசதியாக உள்ள தகவமைப்பு? காற்றறைகள் 
39. நீர்த்தாவரங்களில் வேரூன்றி மிதப்பவைக்கு ஒரு எடுத்துக்காட்டு? அல்லி 
40. எத்தாவரத்தின் இலைகள் உணவாகப் பயன்படுகிறது? முட்டைகோஸ் 

No comments:

Post a Comment