Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 4

எண் வினா விடை
61.ஷெர்ஷாவால் நிறுவப்பட்ட பேரரசு ___________ வம்சம் எனப்படும்?சூர்
62. ஷெர்ஷா எவ்வாறு மரணமடைந்தார்? வெடி விபத்து 
63. ஷெர்ஷா யாருடைய போதனைகளை ஏற்க மறுத்தார்? உலமாக்கள் 
64. இரண்டாம் பானிப்பட் யுத்தம் யாருக்கிடையே நடைப்பெற்றது? அக்பர்-ஹெமு 
65. உலகிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜும்மா மசூதியைக் கட்டியவர்? ஷாஜகான் 
66. அக்பர் தோற்றுவித்த மதம்? தீன் – இலாஹி 
67. “நீதிச் சங்கிலி மணிஎன்ற முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்? ஜஹாங்கீர் 
68. சூரியனில் உள்ள வாயு? ஹைட்ரஜன் 
69. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குஷான அரசை நிறுவியவர்? முதலாம் காட்பிஸஸ் 
70. நான்காவது பெளத்த மாநாட்டைக் கூட்டியவர்? கனிஷ்கர் 
71. அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர்? அரிசேனர் 
72. அஜந்தாவிலுள்ள பெளத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் _______________ காலத்தவை? குப்தர் 
73. அசோகர் அரியணை ஏறிய ஆண்டு? கி.மு.273 
74. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம்? கி.பி.319-335 
75. மருத்துவ அறிஞர் சரகரும், கிரேக்கக் கட்டிட கலை வல்லுநர் எஜிலாஸும் ________________ அரசவையில் இடம் பெற்றனர்? கனிஷ்கர் 
76. _______________ பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்து சக சகாப்தம் உருவாயிற்று? கனிஷ்கர் 
77. பெளத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு _______________ என்று பெயர்? திரிபிடகம் 
78. புத்தர் தனது முதல் போதனையை உத்திரபிரதேசத்தில் ___________________ எனும் இடத்தில் தொடங்கினார்? சாரநாத் 
79. லோத்தல் எனும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்? குஜராத் 
80. மனித நாகரிகம் வளர்ச்சியின் அடுத்தபடி நிலையை ________________ எனலாம்? புதிய கற்காலம் 

No comments:

Post a Comment