Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 3

எண் வினா விடை
41.நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்? பேகன் 
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்? 
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது? முல்லைப் பாட்டு 
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்? தன்வினை 
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு? யாதும் ஊரே யாவரும் கேளீர் 
47.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?உவமையணி 
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்? திருமூலர் 
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்? ”ட” கர மெய் 
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 
54. வெண்பா எத்தனை வகைப்படும்? 
55. அடியின் வகை? 
56. வஞ்சிப்பாவின் ஓசை? தூங்கலோசை 
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? 
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது? இலக்கணப்போலி 
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?  இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு? பலாச்சுளை 

No comments:

Post a Comment